சென்னை : செப்டெம்பர் 07, 2024
பதிவு புதுப்பிக்கப்பட்டது : செப்-08, 2024
மக்கள் நீதி மய்யம் வில்லிவாக்கம் தொகுதி பொறியாளர் அணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (ஞாயிறு) அன்று வில்லிவாக்கம் தாய் பிசியோதெரபி மருத்துவமனையில் நடக்கவிருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் முற்றிலுமாக இலவசமாக அளிக்கிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவசியம் கருதி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவ முகாமையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுபினராக இணைய அதற்கான சேர்க்கை முகாமும் நடைபெற உள்ளதால் நம்மவரின் அரசியல் கருத்துகளுடன் தூய அரசியலை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பும் யாவரும் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொள்ளலாம்.
வில்லிவாக்கம் தொகுதி – மக்கள் நீதி மய்யம், தொழிலாளர் அணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சிறப்புற நடைபெற்றது. அதன் தொகுப்பு உங்களின் பார்வைக்காக.