சிவகாசி : டிசம்பர் 07, 2024

சிவகாசி மாவட்டத்தின் மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை மற்றும் விருதுநகர் மாவட்டம் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் இணைந்து 5 மாற்றுத்திரனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி இயக்கம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர்…

சிவகாசி மநீம மாவட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவை, மற்றும் விருதுநகர் மாவட்ட கமல் ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியவற்றின் சார்பில், சிவகாசி மநீம மாவட்டச் செயலாளர் திரு. S.முகுந்தன், நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. A.S.நாகராஜன் ஆகியோரின் ஏற்பாட்டில், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் அவர்கள் தலைமையில், மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்வில் நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் திரு. K.சசிபாலன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. P.S. சரவணன், பேரவை செயற்குழு உறுப்பினர்கள் திரு. அன்புச்சுவர் ரமேஷ், திரு. T.பிரசாத், நிர்வாகிகள் திரு.எஸ்.பவுன்ராஜ், திரு.M.ராமர், திரு. C.இருளாண்டி, திரு.V.C.ரவி, திரு. மூர்த்தி, திரு. ராஜா, திரு. ஜஸ்டின், திரு. புவனேஷ், திரு. மாதவன், திரு. கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மய்ய உறவுகள் கலந்துகொண்டனர். – மக்கள் நீதி மய்யம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள் இணையதளம்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #NTSP

நன்றி : மக்கள் நீதி மய்யம், சமூக ஊடகம்