டிசம்பர் 01, 2024

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று நினைவு கூரப்படுகிறது.

சரியான விழிப்புணர்வு இல்லாததால் உலகில் பலர் எய்ட்ஸ் எனும் நோயினால் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். பின்னர் மெது மெதுவாக அந்நோயினால் ஏற்படும் தாக்கத்தையும் உணரத் துவங்கினார்கள். எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி பிணி என்பது ஒரே வழியினால் மட்டுமே ஒருவரில் இருந்து வேறொருவருக்கு தொற்றுவது கிடையாது. அது பரிசோதனை செய்யப்படாமல் செலுத்தப்படும் இரத்தம், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் உபயோகிப்பதால் என இப்படியான சில வழிகளில் கூட எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்படலாம். ஆயினும் எய்ட்ஸ் நோயின் தாக்குதலுக்கு உள்ளான பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.

ஆதரவற்ற அவர்களுக்கு துணையாக அவர்கள் வாழும் காலத்திற்கு வரையிலான ஓர் அரவணைப்பை நாம் நிச்சயம் தர வேண்டும்.

சமூகத்தில் ஒதுக்கப்படும் அவர்களை அரவணைக்கும் விதமாக சென்னையில் பெற்றால் தான் பிள்ளையா எனும் ஓர் தன்னார்வ தனியார் அமைப்பு 2011 முதல் செயல்பட்டு வருகிறது. தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமையும் மற்றும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களும் தமிழகத்தின் முன்னணி பண்பலையான ஹலோ FM இன் தலைமை நிர்வாகியான திரு.ராஜீவ் நம்பியார் ஆகிய இருவரும் இதன் அறங்காவலர்களாக நீடித்து வருகிறார்கள். இந்த அமைப்பில் உள்ள குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதோடு அவர்கள் வாழும் காலம் வரையிலான உணவு, இருப்பிடம் கல்வி போன்ற அனைத்து தேவைகளையும் தன்னார்வலர்கள் மற்றும் புரவலர்களின் உதவியோடு செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நோய்க்கு நிவாரணம் மற்றும் தீர்வு கிடையாது என்ற போதிலும் அவர்களின் கடைசி காலங்கள் வலிகளுடன் நின்று விடாமல் மிக இயல்பாக நடைபெறும் என்ற எண்ணத்தில் அவர்களை அரவணைத்து காத்து வருகிறார்கள். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக இச்சேவையை செய்துவரும் இந்நேரத்தில் அதை விட்டுவிடாமல் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என்பதை நினைவு கூர்வதே இந்த நாள் என நம்மவர் தலைவரின் இந்த விழிப்புணர்வு பதிவு சொல்கிறது.

“The foundation for any relationship is understanding. Similarly fear meet its end when we understand the cause of fear better……

With the right understanding of HIV we can prevent it from spreading” – Mr.Kamal Haasan

Empathy is the cure for stigma.”

#AIDSawareness #KamalHaasan #EndStigma #TakeTheRightsPath #WorldAIDSDay2024

நாம் அரவணைப்போம், எய்ட்ஸ் நோயினால் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தள்ளி வைத்திடாமல் காப்போம்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அதைப்பற்றிய விழிப்புணர்வு கடந்த 2009 ஆண்டில் HIV யால் பாதிப்படைந்த 1000 குழந்தைகளை அவர்களுக்கான மருத்துவத் தேவைக்காகவும் வாழ்விற்கும் தத்து எடுத்துக் கொண்டார். இந்த செயல்பாட்டிற்கு உறுதுணையாக தொண்டு செய்திட வரும் ஆர்வலர்களையும் கேட்டுக் கொண்டார்.

Kamal Hassan at the Petral than pillaiyaa campaign organised by the Tamil Nadu State AIDS Control Society (TANSACS), to ensure proper nutritional and psycho-social care to children orphaned by and vulnerable to HIV.

“It is our collective responsibility to ensure that children living with HIV are provided proper education, nutrition and medical care”, said Kamal.

இது குறித்தான செய்திகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

https://www.indiaglitz.com/kamal-adopts-1000-kids–news-52219

https://www.cinejosh.com/news/1/3571/kamal-hasan-adopts-1000-hiv-ve-children.html

https://www.indiaglitz.com/kamal-adopts-1000-kids-hindi-news-52219#google_vignette

https://www.medindia.net/news/un-signs-on-kamal-haasan-for-campaign-against-hivaids-30061-1.htm

https://www.newindianexpress.com/cities/chennai/2010/Nov/28/kamal-pledges-full-support-to-kids-with-hiv-206324.html