Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது

சென்னை டிசம்பர் 16, 2021 பெண்களின் திருமண வயதை ” 21ஆக ” உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத்…

நாட்டுப்புறக் கலைகளை கலை நிகழ்ச்சிகளின் அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவு – மநீம வரவேற்கிறது

நாட்டுப்புறக் கலைகளை – அரசு நிகழ்ச்சிகள், தனியார் கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. கொரோனாவால் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் இம்முயற்சி பேருதவியாக இருக்கும்

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் – உதவித்தொகை அதிகரிக்க கோரிக்கை

புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…

படியில் பயணம்- ஓட்டுனர்,நடத்துனர் மீது நடவடிக்கை – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை கண்டனம்

`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மய்ய நிர்வாகிகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க களமிறங்கிப் பணியாற்ற வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று நடைபெறும் இக்கூட்டத்தை மய்ய நிர்வாகிகள் முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம்…

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படைத் தலைமை தளபதிக்கு அஞ்சலி

தமிழ்நாடு உதகமண்டலம் டிசம்பர் 9, குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று (08.12.2021 – புதன்கிழமை) மதியம் எம்.ஐ. 17 வி5 ரகத்தைச் சேர்ந்த இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி தீப்பிடித்து…

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு

சிறப்பு கிராம சபை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராம ஊராட்சிமில் “சிறப்பு கிராம சபை” கூட்டம்* 07.12.2021 அன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மயிலாடுதுறை மாவட்ட போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரைஆலையில் கடந்த 2ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. பணிஓய்வுபெற்றவர்களுக்கு சேமநலநிதிவழங்கப்படவில்லை. இதை கண்டித்து @maiamofficial மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.