மய்யத்தின் பாஜக எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு. 

  • இந்தியாவுக்கான பட்ஜெட் விரைவில் வருமென நம்புகிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுவாரசிய கேள்வி

    ஜூலை 23, 2024

    தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக திரு. மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களது ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடப்பாண்டின் நிதி நிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பிஜேபி ஆட்சியல்லாத மாநிலங்களுக்கு போதிய நிதிகளை ஒதுக்கித் தராமலும் அதே சமயம் தற்போதைய ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் அவர்களது கூட்டணி கட்சியில் உள்ள பீகார் மாநிலத்திற்கும் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கும் நிதிகளை ஒதுக்கியுள்ளது எதிர்க்கட்சிகளின் அதிருப்தியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாகச் சொல்வதானால் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கினையும் மதரீதியாக நடத்தும் அரசியலையும் தொடர்ந்து விமரிசனம் செய்து வருகிறார். அதன் காரணமாகவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு உதவிடும் வகையில் தமது தலைமையில் உள்ள கட்சியான ம.நீ.ம சார்பாக வேட்பாளர்களை நிறுத்தாமல் கூட்டணி அமைத்து திமுக, விசிக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாராம் செய்தார். மேற்குறிப்பிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் பிரமாதமான வெற்றியை பெற்று நாற்பது பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி வலுவான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    2018 இல் மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கியதும் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று மக்களின் கவனத்தை பெற்ற மய்யம் அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலிலும் பங்குபெற்று வாக்குகளை நூலிழையில் வெற்றியை சூட்சுமங்களினால் பறிகொடுத்தார் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதன்பிறகான அரசியல் நகர்வுகளில் உன்னிப்பாக பங்கெடுத்த நம்மவர் தலைவர் பாசிச பிஜேபியின் ஆட்சி மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எனினும் வட மாநிலங்களில் பல இடங்களில் ஆளும் பாஜகவே முன்னணியில் இடம்பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ச்சியாக இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்பதும் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளதும் அப்பட்டமாக தெரிகிறது. எனவே அதனை குறிப்பிட்டு தான் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் "இது தே. ஜ விற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றும் விரைவில் இன்டியாவிற்கான பட்ஜெட்டை மீண்டும் தாக்கல் செய்வார்கள் என நம்புகிறேன் என்ற நையாண்டியான கருத்து ஒன்றினை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த பல அரசியல் தலைவர்கள் மற்றும் விமரிசகர்கள் தைரியமான மற்றும் மிகச்சரியான பதிலடியை திரு.கமல்ஹாசன் அவர்கள் ஒரே வரியில் அளித்துள்ளதாக பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

    "Congratulations on a NDA budget, hope to have a INDIA Budget soon." - Thiru. Kamal Haasan, President, Makkal Needhi Maiam

    https://twitter.com/ikamalhaasan/status/1815739269228745065
    https://twitter.com/maiamofficial/status/1815770098851832068

  • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் படுகொலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கடும் கண்டனம்

    சென்னை : ஜூலை 06, 2024

    இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு மாநில தலைவரான திரு.K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினரின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டார். குறிப்பாக பெரும் மக்களின் நடமாட்டம் உள்ள நகரின் முக்கியப் பகுதியான பெரம்பூரில் அமைந்துள்ள அவரது வீட்டினருகே இந்த கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும் கூடவே ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொன்ற கொலையாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

    "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." - திரு.கமல்ஹாசன், தலைவர் - மக்கள் நீதி மய்யம்

    https://twitter.com/ikamalhaasan/status/1809452049270231493

    https://twitter.com/maiamofficial/status/1809472704233525649

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,

மேலும் படிக்க »

குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் – பாசிசம் அகற்றுவதே இப்போதைய தேவை – மய்யத் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்

மேலும் படிக்க »

தமிழக பெண்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கும் பாஜக பெண் அமைச்சர்களுக்கு கண்டனம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்

மேலும் படிக்க »

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்

மேலும் படிக்க »

தேர்தலுக்காக இறையாண்மையைச் சிதைக்கும் மத்திய அரசு ! – மக்கள் நீதி மய்யம் தலைவர் சாடல்

சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி

மேலும் படிக்க »

Electoral Bonds தடை-வரலாற்றுத் தீர்ப்பை வரவேற்கிறேன் : ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி

மேலும் படிக்க »

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமனம்-மத்திய அரசின் இந்தி திணிப்பு : ம.நீ.ம கண்டனம்

ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்

மேலும் படிக்க »

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ

மேலும் படிக்க »

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய

மேலும் படிக்க »

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை

மேலும் படிக்க »

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்

மேலும் படிக்க »

என்னாயிற்று தேர்தல் வாக்குறுதிகள் : கேட்டது கோவை தெற்கு மக்கள் நீதி மய்யம்

கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி

மேலும் படிக்க »

கோவை தெற்கு MLA வானதி ஸ்ரீநிவாசன் : செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் – மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி

மேலும் படிக்க »

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான

மேலும் படிக்க »

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் ஏன் புறக்கணித்திருக்கக்கூடாது – திரு கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

ஜூன் ௦9, 2௦23 இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி

மேலும் படிக்க »

நான் பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 உலக திரையுலக வரலாற்றில் இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான பங்களிப்பை தந்து பெரும் பங்காற்றி வருவது தமிழ்த் திரையுலகம் என அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்த் திரையுலகில் சுமார் 6 வயது

மேலும் படிக்க »

பாராளுமன்றத் திறப்புவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்

மேலும் படிக்க »

மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்

மேலும் படிக்க »

மக்களின் நலனுக்காக என் சொந்தப் பணத்தில் போயிங் விமானத்தில் கூட வருவேன் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.

மேலும் படிக்க »

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு

மேலும் படிக்க »

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்

மேலும் படிக்க »

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்

மேலும் படிக்க »

நியாயத்தின் பக்கம் நான் துணை நிற்பேன் : திரு ராகுல்காந்திக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 23, 2௦23 ஆளும் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் மீது பிரதமர் பெயரை அவமதித்ததாக கூறி வழக்கு பதியப்பட்டு, அவசர அவசரமாக இரண்டு வருட

மேலும் படிக்க »

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று

மேலும் படிக்க »

எது முக்கியம் : மதவாதமா ? தேச நலனா ?

ஈரோடு : பிப்ரவரி 18, 2023 மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து தேச நலன் காக்க ஈரோட்டில் நம்மவர்.. ErodeEastByPoll #ErodeByElection #ErodeEastByPolls #Erode #ஈரோடுகிழக்கில்நம்மவர்

மேலும் படிக்க »