கோவை – ஜூலை 17, 2023

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அதனை இன்னும் செய்து தராமல் இருப்பதை கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜூலை 16 அன்று கோவை தெற்கு உக்கடம் பகுதி வள்ளியம்மை பேக்கரி அருகில் நடைபெற்றது. கட்சியின் துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகளும் உடன் மய்யம் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு திருமதி வானதி அவர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன் மூலம் சமூக ஊடகங்களில் ஹாஷ்டேக் ட்ரென்ட் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் தலைமை தாங்க, மண்டல செயலாளர் திரு.ரங்கநாதன் முன்னிலை வைத்தார். மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் திரு.சினேகன் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார். விவசாய அணி மாநில செயலாளர் திரு. மயில்சாமி, பரப்புரை மாநில செயலாளர் திருமதி. அனுஷா ரவி, தொழில் முனைவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஸ்ரீ ராதாஷா தேவியார், மதுரை மண்டல செயலாளர் திரு.அழகர், நற்பணி இயக்க அணி மண்டல அமைப்பாளர் திரு.சித்திக், விவசாய அணி மண்டல அமைப்பாளர் திரு.ஸ்ரீதர், அக்னி சிறகுகள் அமைப்பின் நிர்வாகி திரு. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மய்யத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இக்கண்டன கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் திரு.பிரபு, திரு.சிட்கோ சிவா, திரு.தம்புராஜ், திரு.மனோரம்யன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

#வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே #வானதிஎங்கே_வளர்ச்சிஎங்கே

#மய்யஆர்ப்பாட்டம்#KamalHaasan