சென்னை – மார்ச் 24, 2024

வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், பல்வேறு அணிகளின் மாநில செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரித்து தமிழகமெங்கும் மேற்கொள்ளவேண்டிய பிரச்சாரம் குறித்தும் கலந்தாலோசித்து பல்வேறு முக்கிய நிகழ்வுகள் பற்றிய கருத்துகள் பரிமாறிக்கொள்ளபட்டது. ஏழாம் ஆண்டில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினை இன்னும் பலப்படுத்திட அதற்கான முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் பேசப்பட்டது.

“2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24-03-2024) காலை 11.30 மணியளவில் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம், துணைத் தலைவர்கள் திரு. மௌரியா, திரு. தங்கவேலு ஆகியோரின் முன்னிலையில், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், பரப்புரையாளர்கள் குழு மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.”மக்கள் நீதி மய்யம்

#KamalHaasan #MakkalNeedhiMaiam #INDIAAlliance