Month: December 2023

தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் இரங்கல்

டிசம்பர் 28, 2023 தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…

சாகித்ய அகாடமி விருது – திரு.தேவிபாரதி அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் : 20, 2023 நமது தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பலரும் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளார்கள் தொடர்ந்து மிகச்சிறந்த படைப்புகளை தந்தும் வருகிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு தேவிபாரதி அவர்கள்…

மக்கள் என்ன கறிவேப்பிலைகளா – எண்ணூர் எண்ணை கசிவு மக்கள் நீதி மய்யம் தலைவர் நேரில் ஆய்வு

எண்ணூர் : டிசம்பர் 17, 2023 சென்னையின் அருகாமையில் கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடமே எண்ணூர், இதனருகே தான் கடலின் கழிமுகத்துவாரமும் உள்ளது. இங்கே உள்ள நகரத்தில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கான வாழ்வாதாரம் மீன்பிடித்தொழில் மட்டுமே, வருடத்தில்…

சூழல் மேம்பாட்டு கழிப்பறை அமைப்பு – விஷ்ணுப்ரியா அவர்களுக்கு தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

டிசம்பர் 12, 2023 மலைக்கிராமமான நெல்லிவாசல் அரசுப் பள்ளியில் ‘சூழல் மேம்பாட்டுக் கழிப்பறை’அமைத்த விஷ்ணுப்பிரியாவுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பாராட்டுகள். https://x.com/RKFI/status/1734478364319306105?s=20 செல்வி.விஷ்ணுப்ரியா அவர்களின் கட்டமைப்பில் உருவான சூழல் மேம்பாட்டு கழிவறை குறித்து தகவலறிந்த மக்கள் நீதி மய்யம்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – தாம்பரம் மாவட்டம், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

தாம்பரம் : டிசம்பர் 12, 2023 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தாம்பரம் மாவட்டம் சார்பில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. P.R. பால் நியுலின், மநீம மாவட்ட நிர்வாகிகள்…

சாகாவரம் கொண்ட பாட்டுடைத்தலைவன் பாரதி – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

டிசம்பர் 11, 2௦23 முண்டாசுக்கவி என்றும் தேசியக் கவி என்றும் உலகளாவிய புகழ் கொண்ட மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் புகழாரம். “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன்,…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

டிசம்பர் : 10, 2023 கடந்த நான்காம் தேதியன்று வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சென்னை மக்களுக்கு தெரிந்ததே. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய மழையின் அளவு சற்றே அதிகமாக…

பதுங்கிய எதிர்க்கட்சித் தலைவர் – களத்தில் நிற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் : ௦9, 2௦23 தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் துவங்கிய நாள் முதல் எங்கு சென்றாரோ தெரியவில்லை, இன்றைக்கு திடீரென செய்தியாளர் முன் தோன்றி வழக்கம் போல ஏதோ பேசியிருக்கிறார், அவர் கவலை அவருக்கு…

மக்களின் துயர் துடைக்க புறப்பட்டது நிவாரண பொருட்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் துவக்கி வைத்தார்

சென்னை : டிசம்பர் ௦8, 2023 மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது…

சிலைகள் வடிவில், மனங்களில் நிற்கும் அண்ணல் – திரு கமல்ஹாசன்

டிசம்பர் : ௦6, 2023 இந்தியாவின் சட்ட புத்தகத்தை வடிவமைத்த மாமேதை என போற்றப்படுபவர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர். அன்னாரது நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலி வெளியிட்டுள்ளார்.…