டிசம்பர் : 10, 2023

கடந்த நான்காம் தேதியன்று வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சென்னை மக்களுக்கு தெரிந்ததே. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய மழையின் அளவு சற்றே அதிகமாக பொழிந்ததன் காரணமும் புயலின் தாக்கத்துடன் கூடுதலான மழைப்பொழிவும் அதீத வெள்ளத்தின் தாக்கமும் சென்னையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சூழ்ந்து கொண்டது. பல நாட்களாக வடியாத வெள்ள நீர் மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டும் இருந்ததால் கூடவே அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கப்பெறுவதில் மிகுந்த சிரமங்களும் உண்டாகவே மக்களுக்கு பெரும் தவிப்பும் கவலையும் உண்டானது.

புயலின் தாக்கம் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துணர்ந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பகுதிவாரியாக சீராக அனுப்பி வைத்தார். அதனை எந்த தாமதமும் இன்றி ஒவ்வொரு குடும்பத்திற்கும் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் மய்யம் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுரை வழங்கியதை தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.

அது குறித்த தகவல்கள் வாசகர்களுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் தொகுத்து வழங்குகிறது மய்யத்தமிழர்கள்.காம்

இப்பெரும் உதவியை வழங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கும், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் உங்கள் maiatamizhargal.com மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.