மே 17, 2024

நமது இணையதளத்தில் நம்மவரின் நற்பணி குறித்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என எண்ணிலடங்கா அபிமானிகள் செய்துவரும் நற்பணிகள் பற்றிய தொகுப்புகளை அதன் விபரங்களுடன் தொடர்ந்து எழுதி வருகிறோம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நற்பணியில் உணவு தானம், உடைகள் தானம், இரத்ததானம், உறுப்பு தானம் அனைத்திற்கும் மேலாக உடல் தானங்களும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நற்பணி இயக்கமாக தொடர்ந்து மக்களுக்கு சேவைகள் செய்து வந்ததை அடுத்து 2018 இல் அரசியல் இயக்கமாக தொடங்கிய பின்னர் அதாவது அரசியல் கட்சியாக பதிவு செய்து அதன் உட்பிரிவுகளான இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர்கள் அணி, விவசாய அணி, தகவல் & தொழில்நுட்ப அணி, ஊடக அணி, தொழில் முனைவோர் அணி என பலதரப்பட்ட அணிகளுடன் நற்பணி அணி என்று கட்டமைத்து அதனுடன் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினை இணைத்து மாநில மற்றும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது.

இவையுடன் நின்று விடாமல் “KAMAL BLOOD COMMUNE” எனும் இரத்த தான பிரிவு ஒன்றையும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு திறம்பட நடத்தி வருகின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள். இதன் மூலம் அறுவைசிகிச்சை முதலான மருத்துவ சேவைகளுக்கு இரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த அமைப்பை தொடர்பு கொண்டால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழியாக சம்பந்தப்பட்ட நபருக்கு தேவையான இரத்தம் தானமாக பெற்று தரப்படும். இது முற்றிலும் இலவச சேவையாக தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டின் போது ஆகஸ்ட் 15 இல் (சென்னை மருத்துவக்கல்லூரி) மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் தலைமை இயக்குனர் மருத்துவர் திரு.ரவீந்த்ரநாத் முன்னிலையில் தமது மூத்த மகள் செல்வி ஸ்ருதி ஹாசன் அவர்கள் சாட்சியாக கையெழுத்திட வாழ்நாளிற்கு பின்னர் தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயனுறும் வகையில் தானமாக அளித்தார். இந்தியாவின் திரையுலகில் வேறு எந்த நடிகரும் இதுவரை செய்யாத மிகபெரும் நற்பணியை செய்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார் அவரைத் தொடர்ந்து பலரும் தனது ஆதர்ச நடிகரின் உடல்தானம் அவரது ரசிகர்களின் மனதிலும் ஆழப் பதிந்தது, அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினை சார்ந்த பல ரசிகர்களும் இரத்ததானம், தத்தமது உடல்களை/உறுப்புகள் தானமாக அளித்து வருகின்றனர்.

இத்தகைய நற்பணிகளை தொடர்ந்து கவனித்து வருகின்ற பல ஊடகங்கள் அவ்வப்போது இது பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. அதன்படியே கேரள மாநிலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல செய்தி சேனலான மனோரமா நியூஸ் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணி, இரத்ததானம் மற்றும் உடல்தானம் ஆகியவற்றையும், மேலும் ரசிகர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்துவரும் நற்பணிகளை வெகுவாக பாராட்டி ஓர் காணொளி தொகுப்பு வெளியிட்டு நம்மவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Special Thanks Credits : Manorama News

Kamal Hassan donates his organs to MMC | Hindi Movie News – Times of India (indiatimes.com)

உயிருக்கு போராடும் பலரது வாழ்வை மீட்டெடுக்க உடல்தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வரும் புகழ்பெற்ற மோகன் பௌண்டேஷன் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் உடன் இணைந்து தேசிய உடலுறுப்பு தானம் நாள் நடத்தியதன் செய்தித் தொகுப்பு (கீழே உள்ள லிங்க்)

MOHAN Foundation celebrates National Organ Donation Day with members of the Kamal Hassan Welfare Society

உடல்தானம் செய்வது தாய்மைக்கு சமம்- கமல்ஹாசன் கவிதை | Kamal Haasan poetry to donate body (maalaimalar.com)

^உடல்தானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்! – மின்னம்பலம் (minnambalam.com)

உலக உடலுறுப்பு தானம் நாள் குறித்த சிறப்புக் கட்டுரை நமது மய்யத்தமிழர்கள் இணையதளத்தில் கடந்த 2022 ஆண்டில் வெளியானது அதன் இணைப்பை இங்கே இணைத்துள்ளோம்

நன்றி : கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – நார்த் அமெரிக்கா Chapter & மக்கள் நீதி மய்யம் & KHWA (நற்பணி அணி)