சென்னை, ஆகஸ்ட் 13, 2022

2002 ஆம் ஆண்டில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 இல் உலகத்தில் திரைப்படக் கலைஞர்களில் முதன் முதலாக உடல் தானம் செய்தவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள்.

தனது சினிமா நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில், பத்திரிக்கையாளர்கள், ரசிகர்களின் முன்னிலையில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயிலும் சோதனைச் சாலையில் பயன்படுத்துவதற்காக தன் உடலை தானம் செய்யும் உறுதிப்பத்திரத்தில் கமல் ஹாசன் அவர்கள் கையெழுத்திட்டார் அவரது மூத்த மகளான செல்வி ஸ்ருதி ஹாசன் அவர்கள் இதற்கு சாட்சிக் கையெழுத்திட்டார்.

அந்த உறுதிமொழிப் பத்திரம் பெற்றுக் கொண்ட சென்னை அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் திரு ரவீந்திரநாத் அவர்கள் இந்த பெரும் கொடையை உள்ளன்புடன் பாராட்டி நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேசிய திரு கமல் ஹாசன் அவர்கள் “எனது உடல் எனக்குப் பிறகு வீணாக போய் விடாமல் மருத்துவம் பயிலும் பல மாணவர்களுக்கு ஒரு புத்தகமாய்ப் பயன்படும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன் என்னைப் போல் பலரும் இது போல் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும் இது ஒரு விழிப்புணர்ச்சியை பரவச் செய்யும் விழாவாக பார்க்கிறேன்” என்றார்.

இதனை முன்வைத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்கள் உடல் தானம் செய்ததைப் பற்றி குறிப்பிட்டு தொடர்ந்து அது போல் பலரும் தம் வாழ்க்கைக்குப் பிறகு தத்தமது உடல்களை தானமாக அளித்தால் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் திகழ்ந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

“உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று வாழ்வைத் தொடர லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். நம்மவர் வழியில் நாமும் உடல் உறுப்புகளைத் தானம் செய்வோம். உயிர்களைக் காப்போம்.” – மக்கள் நீதி மய்யம்

உலக உடல் உறுப்புக்கள் தானம் நாள் ஆகஸ்ட் 13