மதிப்பிற்குரிய மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு,

காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளுக்குச் சென்று மய்யத்தின் சார்பாக முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சிப்போம்.

பயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்களை கள ஆய்வு செய்து தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்( முடிந்தால் வீடியோ, புகைப்படங்களோடு). பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நம்மவரின் சார்பாக மய்யத்தின் உதவிக்கரம் நீட்டுவோம்.

  • செந்தில் ஆறுமுகம்,
    05/08/22