தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் சென்ற 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில்,2 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது.

மேலும், புயல் மற்றும் கனமழை தொடர்பாக மீனவர்களுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கி, சூறைக்காற்று வீசும்போது கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவது ஏற்கத்தக்கதல்ல.