சென்னை அக்டோபர் 16, 2022

புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் அரசியலை கடமையாகவும் நடிப்பை மற்றும் இதர கலைகளை கொண்ட நிகழ்ச்சிகள் வாயிலாக பொது மக்களிடம் ஆழ்ந்த கருத்துகளை உபயோகம் உள்ள தகவல்களை தெரிவிப்பதில் சகல கலா வல்லவர்.

இதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்படும் BIGG BOSS. இதை வாரம் இருமுறை அதாவது சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு தொகுத்து வழங்கினார்.

மேலும் அந்நிகழ்ச்சியில் தாம் படித்த

புத்தகங்கள் பலவற்றை பொது மக்களிடம் பரிந்துரை செய்தார். பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் BIGG BOSS Season 6 இல் பரிந்துரை செய்த புத்தகங்கள் வரிசையாக இடம்பெறும்.

01. தஞ்சாவூர் – நூலாசிரியர் : முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் / பதிப்பகம் : அன்னம் – அகரம் வெளியீட்டகம் (23.10.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

02-ஆப்பிரகாம் பண்டிதர் நூலாசிரியர் டி ஏ தனபாண்டியன்

(30.10.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

“கருணாமிர்த சாகரம்” என்ற புத்தகத்தின் மூலம் தமிழ் இசை தான் அனைத்து இந்திய இசைகளுக்கும் அடிப்படை என்று, ஆராய்ச்சிகள் மூலம் வெளிக்கொணர்ந்த திரு.ஆப்பிரகாம் பண்டிதர்.

03- சங்கர்லால் – நூலாசிரியர் திரு தமிழ்வாணன் / மணிமேகலை பிரசுரம்

(06.11.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

04. TRIED BY FIRE – நூலாசிரியர்கள் : பஸ்ஸாம் அபு ஷெரீஃப் மற்றும் உசி மஹ்னைமி

(13.11.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

புத்தக சாராம்சம் : அரபு/இஸ்ரேல் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் அமைதிக்கான தேடலின் மையத்தில் இருக்கும் இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது குடும்பங்களின் கதை இது. யாசர் அராஃபத்தின் தலைமை லெப்டினன்ட் மற்றும் செய்தித் தொடர்பாளர் பஸ்ஸாம் அபு-ஷரீப் மற்றும் முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறை மேஜரான உசி மஹ்னைமி ஆகியோர் 1988 இல் லண்டன் உணவகத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, அமைதிக்கான தேடலில் அவர்கள் இணைந்தனர். அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் தந்தைகள் மற்றும் தாத்தாக்களின் கதைகள் அரேபியருக்கும் யூதருக்கும் இடையிலான 100 ஆண்டுகால போரை வெளிப்படுத்துகின்றன.

05. சுகுமாரன் கவிதைகள் (1974 – 2019) நூலாசிரியர் திரு. சுகுமாரன் / காலச்சுவடு பதிப்பகம் (20.11.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

06. EMPIRE OF THE SUMMER MOON – நூலாசிரியர் : S.C. GWYNNE / : வெளியீடு Simon & Schuster (27.11.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

07. புலிநகக் கொன்றை (தமிழ் & ஆங்கிலம் வடிவாக்கம்) / நூலாசிரியர் திரு. P.A. கிருஷ்ணன் / காலச்சுவடு பதிப்பகம் (௦4.12.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

08- பாரதியார் சிறுகதைகள் & கதைக் கொத்து நூலாசிரியர் : மகாகவி சுப்ரமணிய பாரதியார் (11.12.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

09. ஆடு ஜீவிதம் / நூலாசிரியர் திரு. பென்யாமின் (தமிழில் : விலாசினி) / பதிப்பகம் : எதிர் வெளியீடு (18.12.2022 அன்று ஒளிபரப்பான BIGG BOSS 6 இல் திரு கமல் ஹாஸன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

10. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை – நூலாசிரியர் : பவா செல்லதுரை / பதிப்பகம் : வம்சி புக்ஸ் (25.12.22 அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

11. வீரயுக நாயகன் வேள்பாரி – நூலாசிரியர் : சு. வெங்கடேசன் (சாகித்ய அகடமி விருது பெற்றவர்) / பதிப்பகம் : விகடன் பிரசுரம் (31.12.2022 அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

12. The Devil’s Wind – Nana Saheb’s Story (தி டெவில்ஸ் வின்ட் – நானா சாஹேப்ஸ் கதை)– நூலாசிரியர் : Manohar Malgonkar (மனோகர் மல்கோன்கர்) / பதிப்பகம் : Hamish Hamilton/ஹாமிஷ் ஹாமில்டன் (08.01.2023 அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

13- செல்லாத பணம் – நூலாசிரியர் திரு. இமையம் / க்ரியா வெளியீடு (15.01.2023 அன்று தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான BIGG BOSS Season-6 எனும் நிகழ்ச்சியில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

14- The Collaboration (Hollywood’s Pact with Hitler – நூலாசிரியர் : Ben Urwand / வெளியீடு : Belknap Press (22.01.2023 அன்று தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான BIGG BOSS Season-6 எனும் நிகழ்ச்சியில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகம்)

மக்கள் நீதி மய்யம் தலைவரும் புகழ்பெற்ற திரைக்கலைஞருமான திரு கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் எனும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் இடையில் புத்தகங்களை பரிந்துரை செய்து வந்தார் அதனை சிலாகித்து தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் ஆகிய திரு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் திரு மகுடேஸ்வரன் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாழ்த்திப் பேசிய தருணங்கள்.