சென்னை : அக்டோபர் ௦1, 2௦23

கோலாகலமாக தொடங்கியது விளம்பரதாரர் வழங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பாகும் BIGG BOSS Season 7. இதில் போட்டியாளர்கள் இன்னும் வரவிருக்கும் நூறு நாட்களுக்கு வசிக்கவிருக்கும் வீட்டினுள் நிகழும் சம்பவங்கள் அது தொடர்பாக நடக்கும் விவாதங்கள் மற்றும் பல சுவையான நிகழ்வுகளை தொகுத்து வழங்கவிருக்கிறார் பிரபல தமிழ்த் திரைப்பட பன்முகத்தன்மை கொண்ட கலைஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவருமான பத்மஸ்ரீ திரு.கமல்ஹாசன் அவர்கள்.

இதில் இன்னும் முக்கியமாக சொல்லப்போனால் வேறெந்த மொழிகளிலும் ஒளிபரப்பாகும் இதே பெயருடைய BIGG BOSS நிகழ்சிகளில் இல்லாத சிறப்பு நமது தமிழ் நிகழ்ச்சியில் உண்டு. அது ஒவ்வொரு வார இறுதி நாட்களில் திரையில் தோன்றி தொகுத்து வழங்கும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகங்களை நிகழ்ச்சியை காணும் தொலைக்காட்சி நேயர்களுக்கு அறிமுகம் செய்வது BIGG BOSS நிகழ்ச்சியை பலரும் ரசித்திடச் செய்வது ஆகும். வெறும் பொழுதுபோக்குடன் நின்றுவிடாமல் தன்னால் இயன்றவரை மக்களை புத்தகங்கள் பக்கமாக திருப்பி அவர்களுக்குள் சிறப்புற அமைந்த படிக்கும் ரசனையை எழுத்தாளர்கள் மீதான ஆவலை பெருகிடச் செய்வதன் மூலம் இன்னும் இலக்கிய உலகிலும் இப்படி ஓர் அற்புதமான புத்தகங்கள் நமக்குப் படிக்கக் கொட்டிக் கிடக்கிறது என்பதை தொலைக்காட்சியின் மூலமாக ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையின் வழியாக மக்களுக்கு அவர்களின் எண்ணங்களில் புகுத்தி விடுகிறார். இதுவும் ஓர் சிறப்பான யுக்தியாக கையாள்வதால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களுக்கு மத்தியில் தன்னை ஓர் BIGG BOSS நிலை நிறுத்திவிடுகிறார்.

இந்த BB7இல் தலைவர் அவர்களால் அறிமுகம் செய்யப்படும் புத்தகங்களின் வரிசையை நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் நல்லதை நான்கு பேருக்குச் சொன்னாலே அது பன்மடங்காகி பெருகிச் செல்லும். இணைந்திருங்கள் எங்களுடன் :

BB-7 ஞாயிற்றுகிழமை அக்டோபர் 1 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இடம்பெற்ற புத்தகம்

“மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி” – திரு.கமல் ஹாசன்

சிதம்பர நினைவுகள் : ஆசிரியர் : பாலச்சந்திரன் சுள்ளிக்காடு / தமிழில் மொழிபெயர்த்தவர் : கே.வி.ஷைலஜா     

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 அக்டோபர் 08 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் வலிகள், போராட்டங்கள், அவமானங்கள் மற்றும் பெருமைகளின் மாஜிஸ்திரேட் கணக்கு, ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி ஒரு மாபெரும் தேசத்தை உலுக்கிய மிருகத்தனமான மோதல்கள் மற்றும் அசாதாரண காரணிகளின் மூச்சடைக்கக்கூடிய பதிவு.

INDIA AFTER GANDHI (A History) : ஆசிரியர் : ராமச்சந்திர குஹா / வெளியீடு : PAN MACMILLAN

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 அக்டோபர் 15 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

அகழ்வாய்வு, மொழியியல், புவியியல், மேலும் சமூகவியல் போன்றவற்றின் அடிப்படையில் சிந்துவெளிப் பண்பாட்டைப் பற்றிய உறுதியான சான்றாதாரங்களையும் கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்துத் தன்னுடைய முடிவுகளை அழுத்தமாக முன்வைக்கிறார் பாலகிருஷ்ணன்.

“சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” – எழுத்தாளர் : ஆர்.பாலகிருஷ்ணன் IPS (Retd)

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 அக்டோபர் 22 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

நீல மண்டலங்கள், ஆயுட்காலம், லோகோதெரபி, ஓட்டம், யோகா, தைச்சி மற்றும் பின்னடைவு போன்ற வாழ்க்கைக் கலை தொடர்பான பல்வேறு தலைப்புகளை Ikigai புத்தகம் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

IKIGAI / The Japanese Secret to a Long and Happy Life / Authors : HECTOR GARCIA & FRANCESC MIRALLES / Publisher – Penguin Life

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 அக்டோபர் 29 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்.

திருக்குறள் – இயற்றியவர் உலகப் பொதுமறை பொய்யாமொழி புலவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவர்

பாடமாக வந்த நூல், கவிதை நூல், பளிச்சென்று கருத்துக்குள் அவர் எந்த அரசனையும் பாடவில்லை ஆனால் எல்லா அரசர்களும் திருக்குறளில் உள்ளபடி இருக்க நினைத்தார்கள் எனலாம்.

தமிழ்ப் பொக்கிஷம் ; விலை அத்தனை கூடுதல் இல்லை எல்லோரது வீடுகளிலும் நிச்சயமாக இருக்க வேண்டும் – தாமதமாக அறிமுகம் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம் எவ்வளவோ பேர் முன்மொழிந்தார்கள் அவர்களைத் தொடர்ந்து நான் வழிமொழிகிறேன்திரு.கமல்ஹாசன்

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 நவம்பர் 05, ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்.

எனது நாடக வாழ்க்கை என்பது தமிழகத்தின் புகழ்பெற்ற நாடக கலைஞரான திரு.அவ்வை சண்முகம் அவர்களின் தன் வாழ்க்கை வரலாற்று நூலாகும். இது அவரது வாழ்க்கை வரலாறு என்றாலும், அது 50 ஆண்டுகால, தமிழ் நாடக வரலாற்றைச் சொல்லும் நூலாகும். இந்த நூலில் 1918 ஆம் ஆண்டு தொடங்கி 1972 வரை தன் நாடக உலக அனுபவங்களை எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன ? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது ? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன ? எப்படி நாடகங்கள் வளர்ந்தன ? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது ? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல்

“எனது நாடக வாழ்க்கை” / நூலாசிரியர் – அவ்வை திரு.T.K.சண்முகம்

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 நவம்பர் 12, ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் அழகிரிசாமி பதித்த தடம் வித்தியாசமானது ; சிறப்பானது. அவரை, அவரது சிறுகதைப் படைப்புகள் தாம் முதன் முதலில் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டின எனலாம். கதைகளில் உள்ளடக்கம், அமைப்பு அனைத்திலுமே சிக்கலற்ற எளிமைத் தன்மை காணப்படுகிறது. மனித உணர்வுகளே இவரது கதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றன. அவர் எழுதி அச்சில் வெளிவந்த சிறுகதைகள் 101 ஆகும். 1963 ஆம் ஆண்டு அழகிரிசாமி கதைகள் என்ற பெயரில் அவருடைய முதல் தொகுதி வெளிவந்தது. பின்பு, பன்னிரண்டு தொகுதிகள் தமிழ்ப் புத்தகாலயம், தேன்மழைப் பதிப்பகம் என்பவை மூலம் வெளியிடப்பட்டன. முதலில் வெளிவந்த அழகிரிசாமியின் கதைகள் என்ற தொகுதியே, அன்பளிப்பு என்ற பெயரில் ஒன்றிரண்டு கதை மாற்றத்துடன் திரும்பவும் வெளியிடப்பட்டது. அவருடைய கதைகள் அனைத்தும் 1940 களிலிருந்து 1970 வரையிலான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் வெளிவந்தவைகளாகும்.

கு. அழகிரிசாமி சிறுகதைகள் / ஆசிரியர் திரு கு. அழகிரிசாமி / வெளியீடு : தேன்மழைப் பதிப்பகம், தமிழ்ப் புத்தகலாயம், காலச்சுவடு பதிப்பகம்

BB-7 ஞாயிற்றுகிழமை நவம்பர் 19 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவரால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

1801- இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப் போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை.

காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய “1801′ நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான் “காலா பாணி’ நாவல் என்று கொள்ளலாம். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.

பெரிய உடையணத் தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையணத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.

கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கிறது. நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியுள்ளார்.

உடையணத் தேவனின் மனைவியும் மற்றொரு வீரமங்கையுமான மருதாத்தாள் பாத்திரத்தை மேலும் புனைவுகள் சேர்த்து, நாவலின் செயற்படு நாயகியாக வலுப்படுத்தியிருக்கலாம். எந்தவொரு வரலாறு என்றாலும் நெடுகிலும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ்களும் கிறிஸ்டியானாக்களும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழகத்தின், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் என பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாதமி விருது இந்த ஆண்டு டாக்டர் மு.ராஜேந்திரன் IAS அவர்களின் காலா பாணி நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் சிவகங்கைச் சீமை பெரிய உடையார் பற்றிய மறைக்கப்பட்ட வாழ்வை வெளிக்கொணரும் இலக்கியமான காலாபாணி நாவலை அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

காலா பாணி / ஆசிரியர் : டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப / வெளியீடு : அகநி பதிப்பகம்

BB-7 ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவரால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

இந்திய சுதந்திரத்தின் பின்னணி மற்றும் பஞ்சாபில் நடந்த வகுப்புவாதக் கலவரங்களைக் கையாளும் மிகவும் முக்கியமான நாவல்களில் இதுவும் ஒன்று.

இந்தியாவின் தொந்தரவான காலத்தின் சூழலுக்கு எதிரான ஒரு மேலாதிக்கக் கதையை நம் முன் முன்வைக்க மல்கோங்கர் முயன்றுள்ளார். இது ஒரு மயக்கும் நாவல், இதில் சமன்கள் அதிவேகமாக நகரும் மற்றும் வாசகரை கடைசி பக்கம் வரை மாறாத அச்சத்தில் வைத்திருக்கும். இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் பூமியை உலுக்கிய நிகழ்வுகளைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு அதிரடி நாவல் இது.

நாவலின் நடவடிக்கை உள்நாட்டு முதல் தேசிய இரத்தக்களரி வரை உள்ளது.

சதித்திட்டத்தின் அமைப்பு சமமாக உண்மையானது மற்றும் ஒரு வகையான ஆவணப்படத் தன்மையைக் கொண்டுள்ளது.

பயங்கரவாத இயக்கம், அந்தமான் சிறைகள், பூர்வீக தலை-வேட்டைக்காரர்கள், பம்பாய் துறைமுகத்தில் பெரும் வெடிப்பு மற்றும் பஞ்சாபில் வகுப்புவாத கொந்தளிப்புகள் – மிகவும் அசாதாரணமான பின்னணியை மல்கோங்கர் தேர்ந்தெடுத்துள்ளார்.

மல்கோன்கர் தனது முன்னுரைக் குறிப்பில், “இந்தக் கதையில் உள்ள வன்முறை மட்டுமே உண்மையாக இருக்கும்; அது இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக மாற, சுதந்திரத்தை அடுத்து வந்தது. அகிம்சை மூலம் சாதிக்கப்பட்டது, வரலாற்றின் இரத்தம் தோய்ந்த எழுச்சிகளில் ஒன்றைக் கொண்டு வந்தது; பன்னிரண்டு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது; கிட்டத்தட்ட ஹைஃபா மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்; இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டனர், கற்பழிக்கப்பட்டனர், சிதைக்கப்பட்டனர்.”

கங்கையில் வளைவு என்பது வன்முறை மற்றும் அகிம்சையின் அர்த்தத்தின் அடிப்படைப் பிரச்சினையை எழுப்புகிறது.

நாவல் பயங்கரவாத இயக்கத்துடன் தொடங்கி, பிரிவினைக்குப் பிந்தைய காலத்தின் வகுப்புவாத கலவரங்களுடன் முடிகிறது.

லாகூர் நகரின் பிரபல அதிபரின் மகன் டெபி தயாள்தான் ஹீரோ. அவர், ஷாபி உஸ்மான் மற்றும் பலர் பிரிட்டிஷாரை அதன் சொந்த வழியில் எதிர்த்துப் போராடும் ஒரு தீவிரக் குழுவின் உறுப்பினர்கள்.

உண்மையில் துளி துளி, வகுப்புவாத விஷம், சுதந்திரப் பணியாளர்களின் வாழ்க்கையை எவ்வளவு மெதுவாகப் புளித்து, கசக்கச் செய்து, அவர்களை வகுப்புவாதப் போராளிகளாக மாற்றுகிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

இளம் புரட்சிகர மாணவர்களின் இந்த குழு, சுதந்திர போராட்ட வீரர்கள் ரயில் பாதைகள், பாலங்கள் மற்றும் பலவற்றை தகர்க்கிறார்கள்.

ஷஃபி உஸ்மான், வகுப்புவாத வெறியின் கீழ், டெபி தயாளைக் காட்டிக் கொடுக்கிறார். டெபி அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைச்சாலைக்கு, கறுப்பு நீருக்கு அப்பால் கொண்டு செல்லப்படுகிறார்.

டெபியின் கல்லூரித் தோழனான கிராமத்துப் பையன், ஜியான் தல்வார் என்ற மற்றொரு கதாபாத்திரம் உள்ளது. அவர் கிராமத்தில் தனது சகோதரனைக் கொன்ற ஒரு நபரைக் கொன்றார், அதனால் அவரும் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

அந்தர்ணன் செல்லுலார் சிறையில் கைதிகள் அனுபவிக்கும் கடினமான வாழ்க்கை நமக்குக் காட்டப்படுகிறது. செல்லுலார் வாழ்க்கையில் கைதிகளின் கொடூரமான நிலைமைகள் பற்றிய மல்கோங்கரின் விளக்கம், அது உயிரோட்டமானதாகவும், பூமிக்குரியதாகவும் இருக்கிறது.

டெபி மற்றும் ஜியானுக்கு இடையே ஒரு தவறான விளக்கம் எழுகிறது. பின்னர் இரண்டாம் உலகப் போர் முறிந்து ஆங்கிலேயர்கள் அந்தணர்களிடமிருந்து வெளியேற வேண்டும். …

நாவல் இவ்வாறு இரத்தமும் கண்ணீரும் கலந்த கதையாகிறது. அவருடைய மற்ற எல்லா நாவல்களையும் போல. கங்கையில் வளைந்து சிதறல் மற்றும் ஏமாற்றம் என்ற செக்கோவியன் கருப்பொருளைக் கையாள்கிறது, இது உலகளாவிய பொருத்தத்தை உருவாக்குகிறது.

A Bend in the Ganges / Author Mr. Manohar Malgonkar

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 டிசம்பர் 03 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

“கவிதை என்று சொல்லும் போது பொதுவாகவே சொற்சிக்கனம், இறுக்கமாக ஒரு கருத்தை சொல்வது என்பது தான் வழக்கமான பாணி. ஆனால் இதிலிருந்து சற்றே விலகி நிற்கும் ஒரு இளம் கவிஞர் அவருடைய இயற்பெயர் சத்தியமூர்த்தி, புனை பெயர் இசை. அதாவது முக்கிய பேசுபொருளாக இருக்கும் உறவுச்சிக்கல்கள், தனிமை, அரசியல் நையாண்டி, அந்நியப்படுதல் இவையெல்லாம் இவர் கவிதைகளில் இருக்கும். ஆனால், இவர் அதை சொல்லும் முறை நண்பனிடம் பேசுவது போல் போல் யதார்த்தமாக இருக்கும். இவர் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதிய கவிதையின் தொகுப்பு இசை கவிதைகள் என்ற தலைப்பில் புத்தகமாக கிடைக்கிறது”.

இசை கவிதைகள் // ஆசிரியர் : திரு இசை // வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

#IsaiKavithaigalBook

BB-7 ஞாயிற்றுக்கிழமை 2023 டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை. அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன். இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள்.

மண்டியிடுங்கள் தந்தையே / ஆசிரியர் திரு. எஸ் ராமகிருஷ்ணன் / வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

BB-7 ஞாயிற்றுக்கிழமை 2023 டிசம்பர் 17 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

திரு.எஸ்.எல்.பைரப்பா எனும் கன்னட எழுத்தாளர் எழுதிய புத்தகம் “பருவம்” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்தவர் எழுத்தாளர் திரு.பாவண்ணன். மகாபாரதத்தை பின்புலமாக கொண்டது அதை புராணமாக சொல்லாமல் ஓர் சரித்திரமாக எழுதியது தான் குறிப்பிடத்தக்கது.

பருவம் / ஆசிரியர் : திரு.எஸ்.எல்.பைரப்பா / தமிழில் திரு.பாவண்ணன் / வெளியீடு : சாகித்ய அகதமி

BB-7 ஞாயிற்றுக்கிழமை 2023 டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்.

‘அம்பேத்கர் இன்றும் அன்றும்

அம்பேத்கர் அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார்.
அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன.சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே.
அவற்றின் தொகுப்புகளே இந்நூல்…….

BB-7 ஞாயிற்றுகிழமை 2023 டிசம்பர் 31, ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்.

1980 களில் நான் நடத்திய கலை இலக்கிய இதழ் “மய்யம்” எழுத்தின் பால் அன்பு கொண்ட என் மீது அன்பு கொண்டு தமிழின் பல படைப்பாளிகள் & எழுத்தாளர்கள் எனக்காக தங்கள் படைப்புகளை மய்யம் இதழில் வெளியிட பெரிதும் துணைபுரிந்தார்கள், அதை எனக்கு அவர்கள் தந்த கௌரவமாக கருதுகிறேன். – திரு.கமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம்

மய்யம் இதழ்களில் வெளியான படைப்புகள் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டு – கமல் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்படவிருக்கும் புத்தகம். வரவிருக்கும் புத்தக கண்காட்சியில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மய்யம் மாத இதழில் வெளிவந்த படைப்புகள் தொகுப்பு. மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள்” என்கிற புத்தகம்.

இதழ் :
இயக்குனர் ராசி அழகப்பன், கவிஞர் புவியரசு

தொகுப்பு:
எழுத்தாளர் செல்வேந்திரன்

மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள் / தொகுப்பு “மய்யம்” / வெளியீடு : கமல் பண்பாட்டு மையம் / யாவரும் பப்ளிஷர்ஸ்

BB-7 ஞாயிற்றுகிழமை 2024 ஜனவரி 07, ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

NO என்பது தர்க்க அமைப்பின் அடிப்படைக் கருவி. ஆம் என்பது நம்பிக்கை அமைப்பின் அடிப்படைக் கருவி. PO என்பது படைப்பு அமைப்பின் அடிப்படைக் கருவியாகும். கடந்த காலத்தில், கருத்துக்கள் எப்போதும் மக்களை விட நீண்ட காலம் வாழ்ந்தன. அவை நிறுவப்பட்டவுடன், யோசனைகள் மெதுவாகவும் பல தலைமுறைகளாகவும் மாற்றப்படும். ஆனால் இன்று தொழில்நுட்பமும் அறிவியலும் உலகில் மாற்றத்தின் விகிதத்தை விரைவுபடுத்தியுள்ளன, முதன்முறையாக மக்கள் உண்மையில் யோசனைகளை விட நீண்ட காலம் வாழ்கின்றனர். இதன் அர்த்தம், முதல் முறையாக மக்கள் தங்கள் வாழ்நாளில் உலகத்துடன் இணைந்திருக்க தங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும்.’

புத்தகம் : PO : Beyond Yes and No / ஆசிரியர் : Edward De Bono / வெளியீடு : International Centre for Creative Thinking (1973)

BB-7 ஞாயிற்றுகிழமை 2024 ஜனவரி 14, ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம்

புத்தகம் : POLITY SIMPLIFIED ஆசிரியர் : திரு.R.ரங்கராஜன் Ex-I.A.S / வெளியீடு : Mc Graw Hill