சென்னை : செப்டெம்பர் 28, 2023

மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் : அட யார் இவர் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறது என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு முனைவர் திரு எம்.எஸ்.சுவாமிநாதன் சென்றால் சட்டென்று தெரியவரும். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர் வேளாண் விஞ்ஞானி ஆவார். இந்திய வேளாண் அறிவியலாளர் 196௦ களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை பஞ்சம் ஏற்படாதவாறு காத்தவர். அயல்நாட்டு அறிவியலாளர் நார்மன் போர்லாக்குடன் இணைந்து செயல்பட்ட கூட்டு அறிவியல் முயற்சிகள் உலகம் முழுக்க பெரிதும் கவனிக்கப்பட்டவை. எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவரும் இவரே. கோதுமை மற்றும் உயர்ரக அரிசியின் உயர் விளைச்சல் வகைகளை இயற்கை முறையில் அறிமுகம் செய்து நடந்த பசுமைப்புரட்சியின் உலகளாவிய தலைவராக திகழ்ந்தார்.

தாவரவியல், தாவர மரபியல் , கலப்பிறப்புரிமையியல், உயிர்சூழற் பொருளியல், தாவர வளர்ப்பு & உயிர்ச்சூழல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். திரு எம் எஸ் எஸ் அவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் மிக முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தார்.

இவர் இந்தியாவின் பசுமைப்புரட்சியை முன்னின்று நடத்தியவர், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களிலும் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி மற்றும் தலைவராக இருந்தவர், வேளாண்மைத்துறை செயலாளர் மற்றும் நடுவண் திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.

இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பலவும் இதுவரை 38 முனைவர் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன. தேசிய மற்றும் சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர், பெருமைமிகு மகசேசே விருதும் கொலம்பியா பல்கலைகழகத்தின் வால்வோ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது மிகச் சிறப்பு. இத்தகைய சிறப்பான ஓர் மனிதராக, பசுமைப்புரட்சி தந்தையாக விளங்கியவர் ஓர் சிறந்த மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார்.

முனைவர் திரு எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் தமது வயது முதிர்வின் காரணமாக இன்று இயற்கை எய்தினார், அவரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Deeply grieved by the passing away of Dr. M.S. Swaminathan, eminent agriculture scientist and the father of India’s green revolution. On gaining Independence the most challenging governance issue for the country was it’s ability to feed its population, a task which most of the world felt India would be incapable to accomplish. It was pioneers such as Dr. M.S Swaminathan who made India into a self-sustaining and food surplus nation. We are all indebted to his life’s work. A grateful nation will never forget your immense contributions. – Thiru.Kamal Haasan, President, Makkal Needhi Maiam

#MSSwaminathan

https://x.com/ikamalhaasan/status/1707393548566585556?s=20

https://x.com/Maiatamizhargal/status/1707395866431230132?s=20