தமிழ்நாடு – மே 06, 2024

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. வழக்கம்போல் நமது மாணவச் செல்வங்கள் 95% அளவில் வென்றிருக்கிறார்கள். மீதம் உள்ள 5% விழுக்காடு மாணவர்கள் தங்களது வெற்றியை தவற விட்டிருக்கலாம். அதற்கென அவர்கள் துவண்டு போகாமல் தவறவிட்ட வெற்றியை எட்டிப் பிடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்.” – திரு.கமல்ஹாசன் – தலைவர், மக்கள் நீதி மய்யம்