சென்னை : மார்ச் – 01, 2024

கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து நிற்பர். எந்த சூழலிலும் கல்வி என்பது எல்லா வகையிலும் உற்ற துணையாக இருக்கும் கற்பதை பிறருக்கு கற்பித்தலும் சிறந்த சேவையே என்பார். அதனால் என்னவோ தன்னைச் சுற்றிலும் மிகச் சிறந்த கல்வி வல்லுனர்கள், எழுத்தாளர்கள் என கல்வி மற்றும் எழுத்து துறை சார்ந்த வல்லுனர்களுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எனது வழிகாட்டியாக இருந்து வருவதை பெருமிதம் கொள்கிறேன் என்பார் நம்மவர்.

இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறத் துவங்கியுள்ளதை குறிப்பிட்டு அனைத்து மாணவ மாணவியர்கள் மிகச்சிறப்பாக தேர்வுகளை எழுதி முழு மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் என தமது உளமார வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் அன்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் எமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சார்பாக 100% வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது உங்கள் மய்யத்தமிழர்கள்.com

“இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ‘பொதுத்தேர்வு’ எனும் அனுபவத்தை எதிர்கொள்ளுங்கள். இத்தனை நாள் கற்றுக்கொண்டதை அச்சமின்றி எழுதுங்கள். வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது என்பதை மறவாதிருங்கள். வெற்றி நிச்சயம் உங்களைத் தழுவிக்கொள்ளும்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்