சென்னை – மார்ச் 26, 2024

மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தொண்டர்களில் ஒருவர் “தலைவா, நாங்க இருக்கோம் தலைவா கவலைப்படாதீங்க” என உரத்த குரல் எழுப்பிச் சொன்னதும் அரங்கம் அதிர சிரித்தனர். அதற்கு பதிலாக சிரித்துகொண்டே “நான் கவலைப்பட்டதே கிடையாது அதான் எனக்காக நீங்க இருக்கீங்க என்பது எனக்குத் தெரியும்” என பெருமை பொங்க சொன்னதும் மீண்டும் அரங்கம் மகிழ்ந்து சிரித்தது கூடவே நெகிழ்ச்சியை தந்தது எனலாம்.