சென்னை : மார்ச் 24, 2024

மக்கள் நீதி மய்யம் இண்டியாவுடன் அணியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரிந்ததே, அதற்கான தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான கருத்தான “அரசியலும், மதமும் ஆபத்தானக் கலவை.” என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது திரைப்படத்தில் வசனமாக வைத்திருந்ததை இன்றைக்கு நினைவுகூர்ந்து சொல்லியபோது அரங்கமே அதிர்ந்தது. ஏனெனில் தற்போதைய சூழலும் அதுவாகவே இருக்கிறது. மனிதம் அற்ற மதம்வாதம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதில் உறுதியாக இருக்கும் நம்மவர் சாதி மதம் துறந்தவர் என்பதில் எள்ளளவும் எவருக்கும் சந்தேகமில்லை.