சென்னை – மார்ச் 24, 2024

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்குகொள்ள சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தலைமையேற்று நடத்திவைத்த தலைவர் அவர்கள் வழக்கம்போல் தனக்கான பாணியில் தன்னைப்பற்றி மற்றும் தனது அரசியல் நகர்வுகளைப் பற்றி பலரும் கேள்விஎழுப்பியும் சந்தேகம் மற்றும் ஆச்சரியம் கொண்டும் பேசிவருவதை குறிப்பிட்டு அவை அனைத்திற்கும் தகுந்த பதில்களை அரங்கம் அதிர தந்தார். அதனை அதற்கடுத்த நம் பதிவுகளில் தொடர்ச்சியாக காணலாம்.

“இன்று (24-03-2024) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வழிகாட்டுதல் கூட்டத்தில் பேசிய தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன், தன்னை நோக்கி வைக்கும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “திமுக-வுடன் கைகோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம், TV யை நோக்கி எறியப்பட்ட ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது” என்று கூற, அரங்கம் அதிர்ந்தது.”மக்கள் நீதி மய்யம்