பெரம்பூர் : மே 26, 2024

கோடையில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர், பழரசம் வழங்கல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, திரு.வி.க. நகர் தொகுதியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. வி.உதயகுமார் ஏற்பாட்டில், கடும் கோடை வெயிலால் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், குடிநீர், மோர், பழரசங்கள் மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், மய்ய உறவுகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்