மதுரை : மலைச்சாமிபுரம்

Post Updated : May 06, 2024

கல்லாமை இல்லாமை ஆக்குவோம்

படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சரி நமக்கான அடையாளம் என்ன, நமது தனித்துவம் என்ன, நமது திறன்கள் என்ன, நமது எதிர்காலம் என்ன இது போல் பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டேயிருக்கும். “சந்தர்ப்ப சூழலால் நாம் தான் நம்மை கல்வியால் செழுமைப்படுத்திக்கொள்ள முடியாமல் இருந்துவிட்டோம், நமது பிள்ளைகள் அப்படி இருந்துவிடக் கூடாது,” என முடிவு செய்து தமது குழந்தைகளுக்கான கல்வியை தந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் நினைத்து சேரும் இடமே கல்விக்கூடங்கள். ஆணோ பெண்ணோ எந்த குழந்தையும் தமது எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள கல்வியறிவு நிச்சயம், அத்தியாவசியமும் கூட. ஆக அவர்களுக்கான தடம், அவர்களுக்கான இடம் என அனைத்தும் கல்வியின் மூலமே கிடைக்க வழிவகை செய்வதே கல்விச்சாலைகள்.

சரி பள்ளிகூடங்கள் உள்ளன, படிப்பு மட்டும் போதுமா என்ன ? நமது அறிவை பெரிதாக்கிக்கொள்ள இன்னும் புத்தகங்கள் வேண்டுமே, அதற்காக கிடைக்கப்பெறும் புத்தகங்கள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிட முடியுமா என்ன, எனும் கேள்விக்கு விடையே நூலகங்கள். நமது மக்களுக்கு தெரியாததா என்ன, ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமான நூலகம் சென்னையில் அமைந்திருப்பது என்பது. பள்ளிக்கல்விக்கு மதிப்பளிப்பது போலவே எண்ணிலடங்கா தலைப்புகளில் வெளியாகி இருக்கும் கோடிக்கணக்கான புத்தகங்கள் அமையபெற்ற இடமே நூலகம்.

அரசு மற்றும் மாநகராட்சிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்களும் நிறைந்திருக்கும் நமது ஊர்களில் பல மாவட்டங்களில் அரசு நூலகங்கள் இயங்கி வருகின்றன. சுற்றுவட்டாரங்களில் எளிய மக்கள் அணுகும்வகையில் நூலகங்கள் அருகாமையில் இல்லாமல் தொலைவில் இருக்கக்கூடும். குக்கிராமங்களில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் தத்தமது படிப்புகளில் ஏற்படும் சந்தேகங்கள், மேற்கோள்கள், செய்முறை கல்வியின் எழுத்துவடிவ புத்தகங்கள் வாயிலாக கற்றறிய நூலகம் என்பது மிக அவசியம். மாவட்ட வாரியாக நூலகங்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் சில ஊர்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மாணவ மாணவியர் சுலபமாக அணுகிட இயலாமல் நூலகங்கள் தொலை தூரத்தில் இருக்கக்கூடும்.

கல்வியின் அவசியமும் அதுமட்டுமில்லாமல் பொது அறிவையும் நுண்ணறிவையும் திறன் மேம்பாட்டையும் வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் பெரும் உதவியாய் இருக்கும் என்றால் மிகையாகாது. மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பல மேடைகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது பள்ளிப்படிப்பு பற்றி தவறாமல் குறிப்பிடுவார். “நான் பள்ளிக்கூட படிப்பை விட்டுவிட்டு தான் நடிக்க வந்து விட்டேன். ஆயினும் நேரம் கிடைக்கும்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். மட்டுமல்லாமல் என்னைச் சுற்றி பல எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் கொண்ட நட்பு வட்டத்தை வடிவமைத்துக் கொண்டேன். அவர்களிடம் நீண்ட நேரங்கள் உரையாடி பல தலைப்புகளை அலசி ஆராய்ந்து மணிக்கணக்காக பேசியிருக்கிறேன். அப்படி பலருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பின் காரணமாக புத்தகங்கள் மீது எனக்கு இன்னும் தீராக்காதல் உண்டாயிற்று. இன்ன புத்தகம் தான் படிப்பது என்றில்லை, அதில் மொழி பாகுபாடும் என எதுவும் இல்லை. ஓர் உற்ற நண்பனைப் போல் பல்வேறு புத்தகங்கள் என்னை ஆட்கொண்டுவிட்டது. அதே சமயம் எவ்வளவு புத்தகங்கள் நாம் படிக்கிறோமோ அதன் தாக்கம் அது போன்றே நம்மை எழுதவும் வைத்துவிடும். அத்தகைய ஆற்றல் நூல்களுக்கு உண்டு. நம்மை மேன்மேலும் புதிதாக்கிக் கொள்ளவும் மெருகேற்றிக் கொள்ளவும் நமது அறிவை பட்டைதீட்டிக் கொள்ளவும் புத்தகங்கள் தான் மிகச்சிறந்த தூண்டுகோல், நிச்சயம் புத்தகங்கள் வாசிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்” என்பார். அப்படிச் சொன்னதோடு நிற்காமல் தான் தொகுத்து வழங்கும் தனியார் நிறுவன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒவ்வொரு வாரமும் புத்தகங்களை பரிந்துரை செய்தார்.

நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கலையுலக திறமை மீதும் அவரது திரைப்படங்கள், வசனங்கள் மீதும் அலாதி ப்ரியம் கொண்ட எண்ணிலடங்கா ரசிகர்கள் பலர் பல நற்பணிகளை சுமார் நாற்பது ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கடல்கடந்தும் வசிக்கும் நம்மவரின் அபிமானிகள் அங்கிருந்து கொண்டே சொந்த ஊரான தமிழகப் பகுதிகளில் பல நற்பணிகளைச் செய்து வருகிறார்கள். அதன் இன்னுமொரு பரிமாணமே இந்த நம்மவர் படிப்பகம் எனும் புதிய முயற்சி. வட அமெரிக்காவில் பதிவு பெற்று இயங்கி வரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சேர்ந்த நிர்வாகிகள் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக பிள்ளைகள் கற்று பயனடைய இலவசமாக ஓர் படிப்பகத்தை உருவாக்கித் தந்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றிய காரணத்தால் இதோ இன்று உருவாகி மதுரை மலைச்சாமிபுரத்தில் கம்பீரமாக எழும்பி நிற்கிறது “நம்மவர் படிப்பகம்”.

KHNI-NA (கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – நார்த் அமெரிக்கா) நிர்வாகிகள் மனதில் இலவச நூலகம் அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் படிப்படியாக உயர்ந்து நிற்க அதற்கான நடவடிக்கைகளில் மளமளவென இறங்கினர் மதுரை மாவட்டத்தை மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகி. திரு.கதிரேசன் அவர்கள் தமது மய்ய உறவுகளுடன் முன்னிற்க கட்டிடம் அமைக்க தேவையான இடம் போன்றவற்றை தேர்வு செய்து முறையாக அனுமதி பெற்று அதற்கான பணிகளில் முழுமூச்சுடன் இறங்கி பணிகளை முடித்தார். வடஅமெரிக்காவில் இயங்கும் KHNI நிர்வாகிகளின் எண்ணப்படி இன்றைக்கு மலைச்சாமிபுரத்தில் நம்மவர் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வகையான தலைப்புகளில் படித்து பயன்பெறகூடிய வகையில் அனைத்து புத்தகங்களையும் இடம்பெறச் செய்துள்ளார்கள். மாணவ மாணவியர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக படித்து பயனுறும் வகையில் செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

நம்மவர் படிப்பகம் எனும் இத்திட்டத்திற்கு முன்னதாக “தருவோம் கண்ணியம்” எனும் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர் பயிலும் அரசு பள்ளிகளில் சுத்தமான நவீன கழிப்பறைகளை கட்டித் தந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது (அது குறித்த தகவல்களை கொண்ட பதிவு விரைவில் வெளியாகும்)

கட்டுமானப்பணி துவக்கப்பட்ட நிகழ்வுகள் :

மதுரையில் மலைச்சாமிபுரம் கிராமத்தில் நம்மவர் படிப்பகம் கட்டுமானப் பணிகள் துவங்கி திறப்புவிழ வரை அனைத்து தகவல்களும் ஒருங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை துவக்க தூண்டுகோலாக இருக்கும் நம்மவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கும், திட்டத்தினை செயலாக்க உறுதுணையாக இருந்த மக்கள் நீதி மய்யம் & கமல்ஹாசன் நற்பணி இயக்கம், வட அமெரிக்க நிர்வாகிகள் மற்றும் மதுரை மய்யம் நிர்வாகிகள், திரு.கதிரேசன் & நிர்வாகிகள், பொருளாதார ரீதியாக உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மய்யத்தமிழர்கள்.com உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

கட்டுமானப்பணிகள் நடைபெற்ற போதும் தொடர்ந்து நிர்வாகிகள் பார்வையிடுதலும் :

நம்மவர் படிப்பகம்

மதுரை ஒத்தக்கடை “மலைச்சாமிபுரம்”

600 குடும்பங்கள் வாழும், முதல் தலைமுறை பட்டதாரிகள் காணாத, தினக்கூலி வேலைகளுக்கு மட்டுமே பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாழும் ஒரு கிராமம். கிராம இளைஞர்கள் முன்னெடுத்து ஒரு தற்காலிக பயிற்சியகம் வைத்துள்ளார்கள். அதை ஒரு கட்டிடமாக எழுப்பி டிஜிட்டல் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மய்யமாக “நம்மவர் படிப்பகம்” உருவாக்க இன்று ஜனவரி 15, 2024 கிராம மக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. கதிரேசன் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த திட்டத்திற்கான முழுமையான செலவை ஏற்க கமல்ஹாசன் வட அமெரிக்க நற்பணி இயக்கம் சான் பிரான்சிஸ்கோ உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். தயா பிரபு – தேசிய செயலாளர், கமல்ஹாசன் வட அமெரிக்க நற்பணி இயக்கம். – கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா

கட்டுமானப்பணிகள் முடிவு பெற்று கம்பீரமாக எழும்பியுள்ள நம்மவர் படிப்பகம் கட்டிடம்.

நம்மவர் படிப்பகத்தின் உட்புற தோற்றம், முதுபெரும் அறிஞர்கள் சித்திரங்களுடன் நம்மவரும்.

நம்மவர் படிப்பகம் திறப்புவிழா அழைப்பிதழ்

நம்மவர் படிப்பகம் துவக்க விழா (மலைச்சாமிபுரம் ஊர் பொதுமக்களும், மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர்கள், பொதுசெயலாளர், மாநில செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், மலைச்சாமிபுரமே விழாக்கோலம் பூண்டது)

மலைச்சாமிபுரம் ஊர் பொதுமக்களும் மேடையில் உரையாற்றினர் உரித்தான நன்றிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர், தமிழக நிர்வாகிகள் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்க பகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் தமது நன்றியை தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் கமல் பண்பாட்டு மையம் நிறுவனருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் “நம்மவர் படிப்பகம்” அமைத்ததை குறிப்பிட்டு தமது வாழ்த்துச்செய்தி அன்பின் வெளிப்பாடு காரணமாக மடலாக வெளியிட்டுள்ளார்.

நம்மவர் படிப்பகம் அமைத்ததை மதுரை பாராளுமன்ற உறுப்பினரான திரு.சு.வெங்கடேசன் அவர்கள் அறிந்துகொண்டு மலைச்சாமிபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று நூலகத்தை பார்வையிட்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே உரையாடி திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் மனமுவந்து பாராட்டியதை மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளது.

நம்மவர் படிப்பகத்தில் கணினியில் செயல்படும் வகையில் “டிஜிடல் நூலகம்” திறந்து வைக்கப்பட்டது.

பல நல்லுள்ளங்கள் நம்மவர் படிப்பகத்திற்கு புத்தகங்களை நன்கொடையாக அளித்த நிகழ்வுகள்

நம்மவர் படிப்பகம் திறப்புவிழாவின் போது :

நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் உள்ள மலைச்சாமிபுரம் நம்மவர் படிப்பகம் நேரில் சென்று கண்டு வியந்து திட்டத்திற்கு செயலாக்கம் தந்த வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்ட மய்யம் நிர்வாகி திரு.கதிரேசன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரையும் மனதார பாராட்டியும் குழந்தைகளுடன் கல்வியை கற்பதால், தொழில்நுட்பம் தொடர்பான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கல்வி முறைகளையும் கற்பதால் அவர்களது எதிர்காலம் எப்படி சிறப்பாக அமையும் என்பதை அவர்களுக்கு எளிமையாக எடுத்துரைத்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நமது தலைவருக்கு இளைஞர்கள் மீது நம்பிக்கையுண்டு குறிப்பாக சொல்வதென்றால் குழந்தைகள் மீது அலாதி ப்ரியம் உண்டு. அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்ற உந்துதல் அதிகம் எனலாம். அதனால் நாளைய தலைமுறையினர் சிறந்து விளங்கிட நாம் இன்றைக்கு அதற்கான நேர்மை விதைகளை விதைத்திட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டுச் சொல்வார். அதையே “விதை நான் போட்டது ஆனா பழம் நாளைக்கு நீ சாப்பிடுவே உன் மகன் சாப்பிடுவான்” என அதியற்புத கருத்தை ஓர் வசனமாக தனது படத்தில் வைத்தார். அன்றைக்கு நம்மவர் தலைவர் கணித்தது போன்றே இன்றைக்கு மட்டுமல்ல காலாகாலத்திற்கும் அந்த வசனம் நிலைத்திருக்கும். அதைத் தான் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்க பிரிவு “நம்மவர் படிப்பகம்” மூலம் செய்து முடித்துள்ளது.

இது தானா சேர்ந்த கூட்டம் நமது தலைவர் நம்மவர் அவர்கள் நம்மவர் படிப்பகத்தை நேரில் சென்று பார்வையிட்டு உரையாற்றிய போது அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்களின் ஆரவாரம்.

நேர்மைத் தலைவன் நம்மவர் அவர்கள் நாளைய இளம் நேர்மைத்தலைவர்களான பள்ளிக் குழந்தைகளுடன் நம்மவர் படிப்பகத்தில் உரையாடிய போது.

நம்மவர் படிப்பகம் துவக்கப்பட்டதை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனங்கள்

துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் நம்மவர் படிப்பகத்தை பார்வையிட்டனர்.

மேற்கண்ட “நம்மவர் படிப்பகம்” துவக்கப்பட்டது தொடர்பான செய்தித் தொகுப்புகள், புகைப்படங்கள், காணொளிகள் அனைத்திற்கும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (வட அமெரிக்கா Capter KHNI-NA) அவர்களுக்கும் நன்றி – மய்யத்தமிழர்கள்.com