சென்னை, ஆகஸ்ட் 14, 2022

பிரான்சில் செப்18 அன்று நடைபெறவுள்ள இந்திய கலாச்சார நிகழ்ச்சியில் திரு.ஃபிரான்சுவா(Mr.Francoise) அவர்கள் தலைமையில் செயல்படும் ”பிரான்ஸ் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர்” பங்குகொண்டு  மருத்துவ சேவைகள், உடல் தானம், ரத்த தானம் போன்ற சேவைகளைச் செய்ய உள்ளார்கள்.

இந்நிகழ்விற்கான அழைப்பிதழை பிரான்ஸ் நற்பணி இயக்க நிர்வாகி திரு.ஜீட்(Mr.Jude) அவர்கள்  வழங்க, நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், அவர்களும், மாநிலச் செயலாளர் திரு.மூர்த்தி அவர்களும் தலைவரின் சார்பாக மாநிலத் தலைமையகத்தில் பெற்றுக்கொண்டனர்.

திரைக்கடல் ஓடி நற்பணி செய்யும் பிரான்ஸ் பிரான்ஸ் நற்பணி இயக்கத்தினருக்கு வாழ்த்துகள் !!