கோவை, ஆகஸ்ட் 22, 2022

நற்பணிகள் தான் நமது முக்கிய பணியாக வைத்து மக்களிடையே அறிமுகம் ஆனோம் அதனால் தான் படம் வெளிவந்தால் தோரணம் கட்டவும் கட்-அவுட் வைக்கவும் மட்டுமே என் ரசிகர்கள் ஈடுபட்டுவிட கூடாது, அதற்கு செலவு செய்யும் அவர்களின் பணமும் உழைப்பும் அப்படியே வீணாகி விடக்கூடாது செய்யும் செலவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று யோசித்த நான் அவர்களால் நற்பணிக்கு செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் அவர்களின் சொந்த உழைப்பினால் வந்தது என்பதையும் மனதில் கொண்டு, அதனை உபயோகமுள்ள செயல்களுக்கு செலவிட்டால் சேவையை பெறும் தேவையுள்ள மக்களின் மனம் நிறையும். எனது படத்தை பணம் கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் என்னை என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கியது போல் என் ரசிகர்களின் வாழ்வும் அர்த்தமுள்ளதாக ஆக வேண்டும் என்று கருதியே ரசிகர் மன்றங்களை துணிந்து கலைத்துவிட்டு அதை நற்பணி இயக்கம் என்று பதிவு செய்தேன், அதோடு நின்று விடாமல் நான் சம்பாதித்த பணத்தில் சில பகுதியை எடுத்து என்னால் முடிந்த நற்பணிக்கு செலவிட்டேன். என்னை இச்சமூகத்தில் ஓர் நடிகனாக மட்டுமே பார்க்காமல் தனது வீட்டில் உள்ள ஓர் உறுப்பினராக பார்க்கும் போது அவர்களுக்கு கைமாறாக ஏதேனும் ஒரு வகையில் சிறு துரும்புகளையாவது கிள்ளிப் போடுகிறேன் அதுபோலவே என் ரசிகர்களும் தங்களை நற்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பித்து வருகிறார்கள் அவர்களை செய்யச்சொல்லி தூண்டும் ஓர் கருவியாக நான் – என்பார் நம் தலைவர் திரு கமல் ஹாசன்.

அப்படி நம்மவர் அவர்களின் வாழ்த்துகளுடன் கோவை மாவட்டம் (தெற்கு) மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி மற்றும் தி ஐ பௌவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்.

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர்கள் திரு A.G மௌரியா, திரு கோவை தங்கவேலு அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் அணி மாநில செயலாளர் திரு சினேகன், மாநில செயலாளர் திரு மயில்சாமி (விவசாய அணி), மண்டல செயலாளர் (கட்டமைப்பு) திரு. ரங்கநாதன், ஊடகப்பிரிவு மண்டல அமைப்பாளர் திருமதி ரம்யா, மண்டல அமைப்பாளர் (தொழில்நுட்ப பிரிவு) திரு SP. செல்வா, கோவை மேற்கு மாவட்ட பொருளாளர் திரு மோகன்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு கண்ணன், திரு அருண், குறிச்சி பகுதி செயலாளர் திரு வினோபா, வார்டு செயலாளர் திரு பிரவீன், வார்டு துணைசெயலாளர் திரு கண்ணன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமிற்கு முன்னிலை வகித்தவர் திருமதி விமலா சிவா அவர்கள், இந்த முகாம் சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த திரு சங்கையா, திரு ராஜன், திரு துணைவேந்தர், திரு சத்யா, திரு ஆண்ட்ரு, திரு ராம், திரு முருகேஷ், திரு சேதுமாதவன், திரு பிரசாந்த், திரு விஜய், திரு செந்தில், திரு கணேஷ், திரு கண்ணன் மேலும் வந்திருந்த நிர்வாகிகள் அனைவரும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த கோவை மேற்கு மாவட்ட அமைப்பாளர் (இளைஞர் அணி) திரு கோ ரமேஷ் BBM அவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்கள்.