சென்னை : டிசம்பர் ௦8, 2023

மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது சென்னை. மூச்சு விடத் திணறி தள்ளாடும் மக்கள், தமது உடமை, துணிமணிகள், வாகனங்கள் என அனைத்தையும் சுழற்றி அடித்து விலகிச் சென்றது அந்த மிக்சுஅங் (மிக்ஜாம்).

புயலால் பெய்து தீர்த்த அதீத மழையால் சென்னைக்கு நீர் வழங்கும் பல ஏரிகள் நிரம்பி வழியவே பாதுகாப்பு கருதி பல கணஅடிகள் நீரும் திறக்கப்பட்டதும் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் தாழ்வான பகுதிகளில் புகுந்து புறப்பட்டு மரங்களையும், கார் போன்ற வாகனங்களையும் கூட விட்டு வைக்காமல் சாய்த்து விட்டது. சரிந்த மின்விநியோக கம்பங்கள், தொலைதொடர்பு கோபுரங்கள், இணையதள வசதி தரும் கேபிள்கள் அனைத்தும் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடல்லாமல் மின்சாரம், உணவு, பால் மற்றும் அலைபேசி சேவைகள் என அத்தியாவசிய சேவைகளை கூட பெற முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர், இது போக வாயில்லா ஜீவன்களான நாய், ஆடு, மாடுகள் என ஒண்டிக்கொள்ள இடமில்லாமல் தத்தளித்து துயரில் ஆழ்ந்தது இன்னும் வேதனை. இதனிடையே நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் என பலரும் வேதனையடைந்தனர்.

திங்களன்று துவங்கிய இந்த இயற்கைப் பேரிடர், புயல் கரையைக் கடந்து மழை விட்ட பிறகும் ஏற்பட்ட வெள்ளம் பல இடங்களில் வடியாமல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்து விட்டதால் தகுந்த நிவாரணம் உடனடியாக கிடைக்கப் பெறாமல் தவிப்பதாக சமூக ஊடகங்கள் மூலமாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் மூலமாகவும் அறிந்து கொண்ட தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உடனடியாக அவதிக்குள்ளான பொதுமக்களுக்கு மய்யத்தின் சார்பாக நிச்சயம் உதவிட வேண்டும் என்று தீர்மானித்து உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதனை உணர்ந்து கொண்ட நிர்வாகிகள் துரிதமாக செயல்பட்டு முதற்கட்டமாக 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தருவித்து அதன் முதற்கட்டமாக சுமார் 5000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்களான பால் பவுடர், அரிசி, கோதுமை, ரவை, டீத்தூள், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையை தயார் செய்தனர், அதனை விநியோகிக்க வசதியாக சரக்கு வாகனங்களில் ஏற்றிக்கொண்டு விரையும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இன்று காலை தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டு சரிபார்த்து உடனடியாக பொருட்களை விநியோகம் செய்திடும் வகையில் நிவாரண பொருட்கள் சுமந்து நின்ற வாகனங்களை புறப்படச் செய்தார். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் இடைவிடாது தகல்வல்களை அறியச் செய்ததற்கு முதற்கண் நன்றி தெரிவித்து உரையைத் துவக்கிய தலைவர் கடந்த நாற்பது வருடங்களாக நாங்கள் நற்பணிகளை செய்து வருகிறோம் ஆனால் அவற்றின் மீது கேமரா வெளிச்சம் படாமல் இருந்தது அனால் கட்சி ரீதியாக அதே நற்பணியை செய்கையில் அதன் மீது கேமரா வெளிச்சம் படுகிறது, எது எப்படியாக இருப்பினும் எங்களின் நற்பணி விடாமல் தொடரும், அதனால் அதற்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத ரசிகர்களையும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் நாங்கள் கொண்டுள்ளோம் என்றவர் தொடர்ச்சியாக இது போன்ற பேரிடர் காலங்களில் அதனை எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்திருந்தாலும் எதிர்பாராத அளவில் பாதிப்புகள் உண்டாகிறது அதனால் மீட்புப்பணிகளில் சில நேரங்களில் தொய்வும் ஏற்பட்டு விடுகிறது, என்றுமே அரசை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்காமல் பொதுமக்களாகிய நாமும் நீர்நிலைகளின் மீது கல் மண்ணைக் கொட்டி தண்ணீரின் தடங்களை தடுத்து விடாமல் அதன் போக்கில் அதனை போகச் செய்திட வழி வகுக்க வேண்டும் மேலும் அதற்கான பொறுப்பை ஒவ்வொரு நபரும் நமது மனதில் இறுத்திக் கொள்வதும் வேண்டும்.

மேலும் இதுபோன்ற பேரிடர் காலங்களில் நாம் எந்த பாரபட்சமும் பாராமல் தவிப்பவர்க்கு கரம் தந்தும் அவர்களின் அவசர தேவையறிந்தும் உதவிடுவது மனிதநேயம் அதை மட்டும் என்றைக்கும் மறந்து விடாமல் சகோதரத்துவம் கொண்டு செயல்படுவதும் மிக முக்கியம் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர் சமைக்க வழியில்லாமல் நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட சமையல் கூடமும் செயல்படும் அதன் மூலமும் நிலைமை சீராகும் வரை உணவுகள் சமைக்கப்பட்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக தொடர்ந்து பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். இந்த நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் எங்களுடன் இணைந்துள்ளன இந்த நேரத்தில் அவர்களுக்கும் எமது கட்சி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.

மக்கள் நீதி மய்யம் தருவித்த அத்தியாவசிய மளிகைப் பொருட்களை சுமந்து கொண்டு வாகனங்கள் பலவும் தலைமை நிலையத்தில் இருந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு விரைந்தன. மய்யமும் மக்களுக்கானது மக்களின் தேவையை மய்யம் என்றும் உணரும் அதற்கான பணிகளில் எப்போதும் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளும் என்பது இதன் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

https://x.com/maiamofficial/status/1733101324235948147?s=20

https://x.com/maiamofficial/status/1733052830242820417?s=20

https://x.com/SocialMediaMNM/status/1732988876535521330?s=20

https://x.com/KirubakaranMCA/status/1732993521987276919?s=20

https://x.com/rameshlaus/status/1733066076316205393?s=20

https://x.com/SakalaVallavan/status/1733005155799601555?s=20

https://x.com/thatsTamil/status/1732991230047375681?t=MKKejC6DMJPf5Vwj8G7haQ&s=08

https://x.com/TamilTheHindu/status/1732983062315573386?s=20

https://x.com/MouryaMNM/status/1733032896393531442?s=20

https://x.com/nammavar11/status/1732996321345462697?s=20

https://x.com/rtielango/status/1732987481040286141?s=20

https://x.com/rtielango/status/1732972824242061795?s=20

https://x.com/sbarjun7/status/1732795684607447137?s=20

https://x.com/rtielango/status/1732819880183996471?s=20

https://x.com/PTTVOnlineNews/status/1732979005413089533?s=20

https://x.com/sunnewstamil/status/1732967668028670136?s=20

https://x.com/ThanthiTV/status/1733078534405628346?s=20

https://x.com/polimernews/status/1733019276544798997?s=20

https://x.com/ThanthiTV/status/1733091386247860670?t=1Q0XwH1jP8iUJl0jKF9l_w&s=08


#kamalhassan
#MakkalNeedhiMaiam #ChennaiFloods2023 #ChennaiRains2023 #ChennaiFloods #ChennaiFloodRelief #களத்தில்_மய்யம்