டிசம்பர் : ௦9, 2௦23

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் துவங்கிய நாள் முதல் எங்கு சென்றாரோ தெரியவில்லை, இன்றைக்கு திடீரென செய்தியாளர் முன் தோன்றி வழக்கம் போல ஏதோ பேசியிருக்கிறார், அவர் கவலை அவருக்கு கட்சியில் இரட்டைத் தலைமை ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்கிறார் போல் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க தவித்து நிற்கிறது இரட்டை இலை. அது போதாதென்று கடந்த பத்து ஆண்டுகளாக இருந்தும் மழைநீர் வடிகால் திட்டங்கள் என்ன ஆனது என்று நிருபர்களின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிப்போய் நின்றதில் யாரோ ஓர் நிருபர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் குறித்த கேள்வியொன்றை கேட்கவும் எடபாடியாரோ நாம தான் இத்தனை நாளாக எந்தப் பக்கமும் செல்லாமல் இங்கே வந்து நின்றால் இவர் வேறு நற்பணியை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்டுக்கோப்பாக தானும் செய்துகொண்டு தன்னைச் சார்ந்துள்ள ரசிகர் மற்றும் தொண்டர்களையும் செய்ய வைக்கும் ஒரு நேர்மையான தலைவரைப்பற்றி என்ன சொல்வது என்று திகைத்து நின்று சடக்கென்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார். மற்றவர் பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு தங்கள் கட்சிப் பெயரை ஸ்டிக்கர் அடித்து ஒட்டி அரசியல் செய்து பழக்கப்பட்டுப் போன இவர்கள், மாறாக நடிப்பைத் தொழிலாக கொண்டு அரசியலை சேவையாக நினைத்து நேர்மையான வருமானம் வைத்துக் கொண்டு சமூகத்தில் பெரும் அந்தஸ்தோடு வாழ்ந்துவரும் நம்மவர் குறித்து இப்படிப் பேசியது பலரையும் வருத்தம் கொள்ளச் செய்தது.

இதுவரை நேரடியான அரசியல் எதுவும் செய்யாமல் திரைமறைவில் சதுரங்க காய்களை நகர்த்திச் கட்சித் தலைமையை பிடித்த கதையும் அப்படியே முதல்வர் பதவியில் தன்னை இருத்திக் கொள்ளச் செய்த அரசியல் குறித்து அவதூறாக நாமும் எதுவும் பேசியதில்லை. அதையே தங்களுக்குச் சாதகமாக கொண்டு மக்களுக்கு விரோதமான பல சட்டங்களை அமல்படுத்த முனைந்த ஒன்றிய அரசிற்கு ஒப்புதல்கள் அளித்து தமிழக அரசியலின் மாண்புகளை அறவே நீர்த்துப்போக செய்த எடப்பாடி பழனிச்சாமி தன் கட்சித் தலைவியின் மறைவையே வெளிப்படையாக பொதுமக்களுக்கு அறிவிக்காமல் இருந்ததும், பொள்ளாச்சி மாவட்டத்தில் இளம்பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைச் எந்த ஒளிவுமறைவுமின்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவராமல் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகளை மறைத்துவிட ஏதுவாக நடந்துகொண்டதும், இன்னும் சொல்வதென்றால் கொடுமையான நோய்களை உண்டாக்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் எனும் அறவழிப்போராட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தி அதையும் தாம் ஒரு மாநிலத்தின் முதல்வர் எனும் பதவிக்கேற்ற எந்த பொறுப்புமின்றி நிருபர்களின் கேள்விக்கு இதே போன்றே இந்த துப்பாக்கிச்சூடு குறித்து நான் தொலைக்காட்சி வழியாக தான் தெரிந்து கொண்டேன் எனும் அலட்சியமான பதிலையும் உதிர்த்தார்.

இன்னும் சொல்வதென்றால் பட்டியல் உண்டு ஆனால் இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மிக முக்கியமான நிகழ்வுகள் இவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்று சொல்லிவிடும்.

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்த தகவல்களை அறிந்து கொண்ட தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி உடனடியாக நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை போர்க்கால நடவடிக்கையாக செய்யுமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சேர்ந்து அங்கு அவதிப்படும் மக்களுக்கு முறையாக விநியோகம் செய்யபட்டும் வருகிறது. இவை மட்டுமல்லாது முக்கிய பகுதிகளில் சுமார் 5000 பேர் பயன்பெறும் வகையில் இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கும் வகையில் மையப்டுத்தப்பட்ட சமையல் கூடமும் நிறுவப்பட்டு உணவு சமைப்பதையும் முடுக்கி விட்டுள்ளார் நம்மவர் தலைவர். தமது அபிமானத்திற்குரிய தலைவரின் அன்பொழுகும் ஆணையை மகிச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ரசிகரும் தொண்டரும் களத்தில் இறங்கி பல வகைகளில் தங்களை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு இரவு பகல் பாராமல் கடிகாரம் போல் சுற்றி வருகிறார்கள்.

இவற்றை எல்லாம் எள்ளளவும் அறிந்து கொள்ளாமல் ஏதோ போருக்கு பயந்து பதுங்குக் குழியில் இருந்துகொண்டு போர் முடிந்ததும் மெல்ல வெளியே எட்டிப்பார்த்து வருபவரைப் போல புயல் தாக்கியது முதல் இதுநாள்வரை எங்கோ இருந்துவிட்டு இன்று வீதிக்கு வந்து நின்று கண்டதைப் பேசும் எடப்படியார் ஓர் சந்தர்ப்ப அரசியல்வாதி என்பதை காலம் வரும்போதெல்லாம் உணர்த்தி வருகிறார் என்பதற்கு நம்மவரை குறை கூறிய இந்த நிகழ்வே சாட்சி.

ஆனால் இதில் எந்த வகையிலும் தன்னை மாசுபடுத்திக் கொள்ளாத ஓர் தலைவராக தனது சொந்த வருமானத்தில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு செலுத்தவேண்டிய முறையான வரிகளை செலுத்திய பின்னர் அதில் இருந்து கட்சியை வழிநடத்தவும், தனது திரைப்பட நிறுவனத்தையும் அதே போன்று நேர்மையாக வழிநடத்திக்கொண்டு வரும் நம்மவர் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை குறித்து தரக்குறைவான மனசாட்சியற்ற எந்த விமரிசனத்தையும் நாம் புறந்தள்ளி விட முடியாது என்பதை உறுதி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சாதிகார நாகரிகமற்ற விமரிசனத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் பதிலடியாக பொதுசெயலாளர் அவர்களின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

https://x.com/maiamofficial/status/1733438644374184062?s=20

https://x.com/Maiatamizhargal/status/1733440725277430114?s=20

https://x.com/sunnewstamil/status/1733467497565708520?s=20

https://x.com/thatsTamil/status/1733467030605717621?t=F4qO0f8vXS3AQffGQGeFsA&s=08

https://x.com/thatsTamil/status/1733467030605717621?s=20