ஜூலை 25, 2௦23

பற்றி எரியுது மணிப்பூர்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக் கேள்வியும் இன்னும் எழுப்பவில்லை இந்தியா முழுமைக்கும் ஆட்சி செய்யும் மத்திய பாஜக அரசு. மணிப்பூர் ஒன்றும் அண்டை நாட்டிலுள்ள மாநிலமும் அல்ல.

பிரிட்டன் முடியாட்சியின் கீழ் இருந்த மணிப்பூர் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்பு 1949 ஓர் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டது. பின்னர் 1972 இல் தனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. மணிப்பூரின் பாரம்பரியமாக மெய்தெய் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தாலும் மலைப்பகுதிகளில் பழங்குடியினரான குக்கி ஸோ எனும் பிரிவினரும் காலம்காலாமாக வாழ்ந்து வருகின்றனர். குக்கி மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் வேறு எந்த சமூகத்தினரும் நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயம் செய்திடவும், குடியமரவும் சட்டத்தில் இடமில்லை. இதனிடையே மணிப்பூர் உயநீதிமன்றம் மெய்தெய் சமூக மக்களும் மலைப்பகுதிகளில் நிலங்களை வாங்கியும் குடியமர ஏன் அரசு இதற்கான நடவடிக்கை ஏற்பாடுகளில் இறங்கக் கூடாது என கேள்வி எழுப்பவும் அதனால் இரண்டு சமூகத்தினரிடையே விவாதம் ஏற்பட்டு அது மோதலாக தொடங்கி பெரும் கலவரமாக சுமார் எழுபது நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இதனை அம்மாநில அரசு மிகக்கடுமையான கட்டுப்பாடுகளால் இந்த மோதல்களை கட்டுப்படுத்த அல்லது முற்றிலும் நிறுத்த முற்படுவதாக தெரியவில்லை என்றே அனுமானம் செய்யப்படுகிறது. துணை ராணுவங்களும், பட்டாலியன் குழுக்களும் மற்றும் உள்ளூர் காவல்துறையும் இயங்கினாலும் மணிப்பூர் தினமும் எரிந்து கொண்டே தான் இருக்கிறது, மோதலால் உயிர்பலிகளும், உடைமைகளும் வாகனங்களும் தீக்கிரையாகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் உச்சமாக இந்த ஜூலை மாதம் 2௦ ஆம் தேதி அன்று இணையதளத்தில் மெய்தெய் பெருந்திரளான சமூகத்தினர் குக்கி ஸோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம்பெண்களை உடலில் ஆடைகள் ஏதுமின்றி முழு நிர்வாணமாக அந்த சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் செயல்வதாக ஓர் காணொளி வெளியாகி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகள் உண்டாக்கியது. அதிலும் இன்னும் கொடுமையாக அப்பெண்களின் பிறப்புறுப்பில் தமது கைகளை கொண்டு தீண்டியும் பலரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வும் (வன்புணர்வு செய்ததாக பதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் தந்துள்ளனர், அப்படி எந்தக் காட்சிகளும் காணொளியில் இல்லை) செய்ததாக பல நிர்பந்தங்களுக்கு வழக்கு பதிவாகியுள்ளது. இத்தகைய படுபாதகச் செயல்களையும் கலவரக்காரர்கள் செய்தது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது பலர் உள்ளம் தாளாமல் கொதிநிலையில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆளும் ஒன்றிய அரசும் அம்மாநில அரசும் இணைந்து பேசி இதற்கான சுமூக தீர்வுகளை எட்ட வேண்டும் என்ற எண்ணம் துளியும் இருப்பதாக தோன்றுகிறது. இது குறித்து ஒன்றிய உள்ளாட்சித்துறை அமைச்சரும் மக்களுக்கு போதுமான விளக்கங்களை சரிவர அறிவிக்கவில்லை கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் குறித்தும் எந்த விபரங்களும் தெளிவாக வெளியாகவில்லை என்றே அறியப்படுகிறது. இதனூடாக நமது இந்தியப் பிரதமர் அயல்நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு இருந்த போது அமெரிக்காவில் மணிப்பூர் கலவரம் பற்றிய ஓர் நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல் நாசூக்காக தவிர்த்ததும் ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. பிரதமர் இதுவரை மணிப்பூரின் நிலை குறித்து எங்கும் எப்போதும் ஒரு வார்த்தையும் பேசிடாமல் மௌனம் காக்கிறார். ஓர் மாநிலம் இத்தனை நாட்களாக மோதல்களால் பற்றியெரிகிறது ஆனால் பிரதமரின் மௌனம் எதெற்கென தெரியவில்லை.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திரு ராகுல்காந்தி அவர்களும் சில வாரங்கள் முன்பு இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களை சந்திக்க முற்பட்டார். ஆயினும் அவருக்கு மாநிலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பாதிப்படைந்த மலைவாழ்மக்களையும் சேதமடைந்த இடங்களையும் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மணிப்பூரின் நுழைவில் திரண்டிருந்த மக்களைச் சந்தித்து உரையாடி ஆறுதல் தெரிவித்தார், தம்மால் மற்றும் தம் காங்கிரஸ் மூலமாக தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக சொல்லிச் சென்றார்.

தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பலர் ஆளும் ஒன்றிய பாஜகவில் உயர்ந்த கட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். திருமதி குஷ்பு, கோவை தெற்கு MLA வான திருமதி வானதி ஸ்ரீநிவாசன் உட்பட ஒருவரும் மேற்கண்ட குக்கி சமூக பெண்களின் மீதான வன்புணர்வு மற்றும் பாதகச் செயல்களை குறித்து எங்கும் பேசவில்லை. குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் ஒன்றிய அமைச்சரான திருமதி ஸ்ம்ரிதி இராணியும் இது பற்றி வாய் திறக்காமல் அமைதியாக உள்ளது பெரும் வேதனை.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் தன் மனதில் பட்ட எந்தக் கருத்துகளையும் ஒளிவுமறைவும் இன்றி துணிச்சலாக சொல்வதில் தயக்கம் காட்டாதவர். ஆயினும் அக்கருத்துகளில் பிறரை தனிப்பட்ட முறையில் விமரிசனம் இருக்காது அதே சமயம் பரந்துபட்ட பார்வை இருக்கும் பாதிப்பு இல்லாத தீர்வுடன் கூடிய வார்த்தைகள் அதில் நிச்சயம் இருக்கும். அதே போல் தான் சொன்ன கருத்தை பின்னர் நான் அப்படிச் சொல்லவில்லை என சமயத்திற்கு ஏற்றாற்போல் மறுக்கும் அல்லது மாற்றிப் பேசும் ஓர் அரசியல்வாதியும் அல்ல. நாட்டுக்கு நல்லது நடக்கும் எனில் அதில் எந்த கட்சிப் பாகுபாடின்றி பாராட்டவும் செய்வார் அதில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதை முதலில் எதிர்க்கவும் செய்வார். சொன்னது சொன்னது தான் அதில் எந்த மாற்றமும் இல்லை பின்வாங்குவதும் இல்லை. அதனால் எவ்வளவு இழப்பு என்றாலும் அதை பொருட்படுத்தாத திடமான எண்ணமும் மனதும் கொண்டவர் என்றால் மிகையாகாது.

நாட்டு மக்களுக்கு ஏதேனும் இன்னல் என்றால் முதல் கேள்வி இவரிடமிருந்து கேள்வி எழும். இதற்கு முன்னதாக பெண்களுக்கு எதிராக, மதத்தின் பெயரால் நடந்த பல கொடுமைகளை எதிர்த்து கேள்விகள் பலவும் உறுதியாக முன்வைத்தவர் அதற்கான பல சான்றுகள் இணையத்தளத்தில் கிடைக்கும்.

மாநிலத்தில் இருக்கும் கட்சியாக மட்டுமே எண்ணி சுருங்கி விடாமல் தேசிய பிரச்சினையாக உருவெடுத்து நிற்கும் மணிப்பூர் கலவரம் பற்றியும் குறிப்பிட்ட சமூக மக்கள் தொடர்ந்து தாக்கபடுவதும் இரண்டு பெண்களை நிர்வாணமாக சாலையில் அழைத்துச் சென்று எழுத்தில் எழுத முடியாத சொல்லத்தகாத படுபாதக ஈனச் செயல்களை செய்து இருப்பது குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள திரு கமல்ஹாசன் அவர்கள் பிரத்யேகமாக தனி விமானம் மூலம் மணிப்பூருக்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் நிலைமையை கண்டு கேட்டறிய வேண்டியதற்குண்டான ஏற்பாடுகளை செய்திட கட்சியின் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்தார். தலைவரின் அறிவுறுத்தலின்படி மணிப்பூர் சென்ற திரு அருணாச்சலம் மாநில நிர்வாகத்திடம் அணுகி இதுகுறித்து விளக்கி தமிழகத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இங்கே நேரடியாக வரத் திட்டமிட்டுள்ளார் என்பதை தெரிவித்தும் அவருக்கு இங்கே வர அனுமதி தரமுடியாது என மறுக்கப்பட்டது குறித்து தான் பெரும் கவலை கொண்டேன் எனவும் மக்கள் வாக்களித்து பொறுப்பேற்கும் ஓர் ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு மாநில மக்களை சந்திக்க அனுமதிக்க மறுப்பது அந்த ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

அலுவல்ரீதியாக தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கும் ம.நீ.ம தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கட்சியின் அயல்நாட்டு பிரிவாக இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் வட அமெரிக்கா அலுவலகத்தில் அங்கிருந்த நிர்வாகிகளுடன் கட்சியின் அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்தும் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது அவருடைய உரையானது மிக அற்புதமாக நிகழ்கால அரசியல் குறித்தும் நாடெங்கிலும் அச்சமூட்டும் மதவாதம் அதனால் நடக்கும் விளைவுகள் குறித்தும் பேசியதும் நாடு வலதின் பக்கமே சாய வைப்பதாக சொன்னதும் குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல ஓர் பொறுப்பான குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டின் மாண்பையும் சகோதரத்துவம் ஆகியனவும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் உணர்த்தியது.

https://t.co/u9nXZc6OLf