சென்னை : மார்ச் : 15, 2024

தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர் மே 22 ஆம் தேதியன்று எதிர்பாராத நேரத்தில் போராட்டக் குழுவினர் மத்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 13 அப்பாவி பொதுஜனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதைய காலத்தில் தூத்துக்குடி பெரும் சோகத்தில் மூழ்கி அம்மாவட்டம் முழுதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இது குறித்து நிருபர்கள் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அவர் வருத்தப்படக்கூடிய விஷயம் தான் இதை நான் தொலைக்காட்சியில் கண்டு கொண்டேன் என்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது. அதற்கடுத்த காலங்களில் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும் அதன் பிறகு வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கே நேரில் சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தன்னையும் அப்போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். காப்பர் ஆலை செயல்பாடுகளால் வசிக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உட்பட உடல்நிலையில் பெரும் வியாதிகள் பலவும் தாக்குகின்றன எனவே இனியும் ஆலை இயங்கக் கூடாது எனவும் அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் நிர்வாகத்திற்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் இதற்கான நிரந்தர தடையுத்தரவை பிறப்பிக்க வேண்டும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதர கட்சிகள் பலவும் உடனடியாக இந்த போராட்டத்தை ஆதரிக்காமல் தயங்கி நிற்கையில் திரு.கமல்ஹாசன் அவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தது குறித்து பொதுமக்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர், போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த நம்மவரை நேரில் சந்தித்து தங்கள் அன்பையும், நன்றியையும் பகிர்ந்துக்கொண்டனர். – மக்கள் நீதி மய்யம்

“மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர்”. – மக்கள் நீதி மய்யம்

நன்றி : ANI News
Courtesy : Thanks to India Today
Thanks : NDTV

#KamalHaasan #MakkalNeedhiMaiam #NammavarAgainstSterlite

Kamal Haasan joins protest against Sterlite plant in Thoothukudi – The Statesman

Thoothukudi anti-Sterlite stir: Kamal Haasan booked for violating prohibitory orders in violence-hit district – India News | The Financial Express

Kamal Haasan Extends Support To Anti-Sterlite Protest In Tamil Nadu’s Tuticorin (ndtv.com)

Kamal Haasan to lead protest against Sterlite plant in Tuticorin | Chennai News – Times of India (indiatimes.com)

#NammavarAgainstSterlite #KamalHaasan #MakkalNeedhiMaiam