ராசிபுரம் : ஜூன் 20, 2023

நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான திரு கவிஞர் சிநேகன் மற்றும் ஊடக & செய்திப்பிரிவு அணியின் மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பாஜகவின் எதேச்சதிகார போக்கினை கண்டித்தும் உரையாற்றப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக இராசிபுரத்தில் 18.06.2023 அன்று பாராளுமன்ற தேர்தலை நோக்கி என்று துணைத் தலைவர்கள் திரு. மௌரியா, திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில், மாநில செயலாளர்கள் திரு. முரளி அப்பாஸ் மற்றும் திரு.கவிஞர் சிநேகன் ஆகியோரின் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் எடுபடாது என்று மய்ய இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர் திரு.சிநேகன் அவர்கள் உரையாற்றினார்!!!

மேலும் இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யக்கொடி ஏற்றி பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் ராசிபுரம் பெரிய கடை வீதியில், மாவட்டச் செயலாளர் J.ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் திரு.S.மாணிக்கவாசகம் வரவேற்புரையாற்ற, மாநிலத் துணைத் தலைவர்கள் திரு.A.G.மௌரிய, திரு.R.தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் கவிஞர் திரு.சினேகன் (இளைஞர் அணி), முரளி அப்பாஸ் ( ஊடகப்பிரிவு), மயில்சாமி (விவசாய அணி) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கோவை மண்டல அமைப்பாளர்கள் அருணா, ரம்யா, சித்திக், ஸ்ரீதர், மஞ்சுளா, சேலம் மண்டல அமைப்பாளர்கள் கிஷோர் குமார், அனிதா, கோவை மண்டல மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிட்கோ சிவா, தம்புராஜ், திருப்பூர் ஜீவா, சேலம் மண்டல மாவட்ட செயலாளர்கள் ராம்மோகன், தாசப்பராஜ், நாமக்கல் ஆதம் பருக், தருமபுரி ஜெயவெங்கடேஷ், கிருஷ்ணகிரி வடிவேல், ஒசூர் ஜெயபால், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்கள் அருள், சுரேஷ், கடலூர் மூர்த்தி, விழுப்புரம் பாபு, மற்றும் தருமபுரி ரவிச்சந்திரன், கோவை சத்திய நாராயணன், சிராஜ், சுரேஷ் , வெங்கட்ராஜ், நாமக்கல் தியாகராஜன், வசந்தி, சித்ரா, கோமதி, சித்ரா பானு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்வி உதவி மற்றும் நலவுதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ராசிபுரத்தில் 5 இடங்களில் மக்கள் நீதி மய்யக் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளை ராஜு, நவாஸ்பாபு, சுரேஷ், கோமதி முருகேசன்,கௌதம், முருகேசன், குணசேகரன்,சிவானந்தம், ரமேஷ், பொன். பாலச்சந்தர், சேகர் சுரேஷ், மணிவண்ணன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். – மக்கள் நீதி மய்யம், தலைமையகம்