ஜூன் 19, 2௦23

பிற கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலரும் அடுத்தடுத்த கட்சிகளில் பொறுப்புகளில் உள்ள பெண்களை ஏகவசனத்தில் பேசுவதும், தகாத வார்த்தைகளில் அவரையும் அவர்களது குடும்பத்தாரையும் வசை பாடுவதும் கேலியும் கிண்டலுமாக ஆபாசமாகவும் பேசுவதை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களும் திருநங்கைகளும் எந்த பாரபட்சமும் இன்றி தங்களது சகோதரிகளைப் போன்றே அன்புடன் நட்பு பாராட்டுவதே தனித்தன்மை எனலாம்.

ஏனெனில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கொள்கைகளில் மய்யத்தில் எவரும் தாழ்ந்தவரில்லை பெண்களும் திருனங்கையரும் சமமாக போற்றப்படவேண்டியவர்கள் தான் அவர்களில் எந்த பாரபட்சமும் காணாமல் ஆடவராகிய நாம் அவர்களை உடன்பிறவாச் சகோதரிகளாக நடத்த வேண்டும் என்றும் மேலும் இந்த எண்ணம் எனது தாயின் மூலமாக எனது குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் கைகளில் ஓர் இளைய மகனாக என் வாழ்க்கையை துவக்கியவன் எனவே அவர்களுக்கான மரியாதையை நாம் தருவது ஒவ்வொருவரது கடமையாகும் என்பார்.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மய்யத்தில் என்றும் முதலிடம் கொடுத்திருக்கும் நம்மவர்!!! – திரு கமல்ஹாசன்


#NammavarShorts
#KamalHaasan