சென்னை : ஜூன் 16, 2௦23

சமீப காலங்களில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் அயல்நாடுகளில் உள்ள அரசாங்க நிகழ்வுகளில், இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவிக்கப்படுகிறார். அங்கே நிகழும் அலுவலில் ஓர் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அவ்வாறே கடந்த மாதத்தில் இங்கிலாந்து மன்னராக திரு சார்லஸ் மணிமகுடம் சூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அது தொடர்பான உரையாடலில் தமக்கும் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற இனிமையான தருணங்களையும் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் ராணி திருமதி இரண்டாம் எலிசபத் அவர்கள், ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது சொந்த இயக்கத்தில் உருவாகவிருந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் சுதந்திர போராட்டத்தை கையில் எடுத்து ஆங்கிலேயரை எதிர்த்த கான்சாகிப்பின் உண்மைக்கதையை மருதநாயகம் ஆக எடுத்துக் கொண்டிருந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஒளிப்பதிவு கேமராவை துவக்கி வைத்து திரு கமல்ஹாசன் அவர்கள் இயக்கி நடித்த காட்சிகளை படமாக்குகையில் கண்டு ரசித்தார். இதைச் சிலாகித்து சொன்னதும் அங்கே குழுமியிருந்த அனைவரும் ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரான திரு எரிக் கார்செட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார் என செய்திகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இன்று திரு எரிக் கார்செட்டி மய்யத் தலைவரிடம் பேசியது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், ட்வீட் செய்துள்ளார் அது மட்டுமல்லாமல் திரு கமல்ஹாசன் அவர்களின் நடிப்பிற்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் இந்தியத் திரையுலகின் மிக முக்கிய நடிகராக கோலோச்சி வலம்வருபவர் அசாத்திய திறமையும் திரையில் தோன்றுகையில் பல்வேறு விதமான ஆச்சரியத்தக்க விதங்களில் தனது பரிமாணங்களை வெளிபடுத்தும் மிகத் திறமையான அவருடன் உரையாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் 247 ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டத்தையொட்டி வரலாற்று சிறப்புமிக்க தென்னிந்தியா ஆளுமைகளை சந்தித்து வருவதாக தெரிவித்தவர் அவர்களில் மிக முக்கியமானவராக திரு கமல்ஹாசன் திகழ்கிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Copy of Tweet mentioned below :

And we finally meet! What a fun chat with Dr. Kamal Haasan, an artist who has made every role possible through his exhilarating screen presence for several decades. So much to explore in the diverse film industry across south India. I am a huge fan!Mr Eric Garcetti, US Ambassador for India

#AmbExploresIndia

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நற்பணி இயக்க ரசிகர்கள் ஆகியோர் தங்களது தலைவரை அமெரிக்க தூதர் பாராட்டி பேசியிருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்திருக்கிறார்கள்.