சென்னை : ஜூன் 14, 2023

பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ என்ற இயக்கம். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும், வருகிற ஜூன் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இவர்கள் நடத்தும் ‘தேசிய நெல் திருவிழா – 2023’ நிகழ்வில் தமிழ் நிலத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு சமூகம் துணை நிற்கவேண்டும் என்றும் அழைக்கிறார் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன்.


#கமல்ஹாசன்
#MakkalNeedhiMaiam