ஜூன் ௦9, 2௦23

இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களிடம் திரைப்படம் முதல் அரசியலில் சந்தித்தது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு மிக அழகாக அற்புதமான கருத்துக்களை முன் வைத்து தமக்கேயுரிய தனித்தன்மையுடன் பதிலளித்தார். அதில் ஒன்று தான் புதுதில்லியில் ஆளும் பிஜேபி அரசால் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது அதனை திறந்து வைக்க மாண்புமிகு இந்தியக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் ஆன்மிக அடியார்களையும், ஆதீனம் பலரையும் அழைத்துக்கொண்டு சென்று அங்கே செங்கோல் ஒன்றையும் நிறுவி தாம் அனைத்து மக்களுக்கும் பொதுவான பிரதமர் என்பதை மறந்து குறிப்பிட்ட மத சடங்குகளை மட்டுமே தொடர்ந்து செய்து வருவதும் இதனால் மதச்சார்பற்ற எதிர்கட்சிகள் இதனை ஒப்புகொள்ளாமல் திறப்பு விழாவில் பங்கு கொள்ளாமல் முழுதும் புறக்கணித்தனர் இது குறித்து தன கருத்தை முன்வைத்துள்ளார் திரு கமல்ஹாசன்.