ஏப்ரல் 20, 2023

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.

தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக தனது தேர்தல் பரப்புரையை செய்து முடித்தார். பல இடங்களில் பொதுமக்கள் பெருந்திரளாக வந்திருந்து தலைவர் அவர்களையும் மற்றும் பரப்புரையும் கேட்டுச் சென்றனர்.

அண்ணாமலை : தமிழ்நாடு பிஜேபி யின் மாநில தலைவராக பொறுப்பு வகிப்பவர். 2019 இல் தனது காவல்துறை அதிகாரி பதவியை (பெங்களூர்) ராஜினமா செய்து விட்டு சொந்த ஊரான தமிழகம் வந்தபின் திடீரென பாஜக வில் நேரடியாக தலைவர் பதவியை ஏதோ வகையில் (சிபாரிசின் மூலமாக கூட இருக்கக்கூடும் என தகவல்) பெற்றுக் கொண்டு ஏதோ தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவியை கைப்பற்றிவிட்டார் போல் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஹெலிகாப்டர் பயணம் குறித்து எந்த முகாந்திரமும் இல்லாமல் வாய்க்கு வந்ததை அடித்து விடுகிறார்.

கர்நாடகாவில் தான் செய்து வந்த அரசு பணியான காவல்துறை உயரதிகாரி எனும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியான அரசியலை கையில் எடுத்ததாகவும், பிறரைப் போல் படிப்பதிலும் சரி பதவிக்கு வருவதிலும் சரி மிகக் கடுமையாக போராடியே வந்ததாகவும் கூறும் அவர் தான் வெகு எளிமையாக வாழும் அரசியல்வாதி என்றும் சொல்லிக்கொள்கிறார். தன்னிடம் ஆடுகள் உள்ளதால் அதனை பராமரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தனக்காகவும் தன் குடும்பத்தினர்க்காகவும் செலவு செய்துகொள்வதாக சொல்லிக்கொள்ளும் இவர் தற்போது கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக பிஜேபி யின் தலைமையால் நியமிக்கபட்டிருக்கும் இவ்வேளையில் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தது குறித்து பேசியிருப்பது வழக்கம் போல் நகைப்பிற்கு உள்ளாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய ஆளுமையாக திகழ்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. கட்சியின் தலைவராக வழிநடத்திச் செல்வதும் அதற்குத் தேவையான செலவினங்களை தனது சொந்த பணத்தில் இருந்து தான் செய்து வருகிறார் என்பதும் தெள்ளத் தெளிவு. இதுவரை கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போதும் பின்னர் பரப்புரை மேற்கொள்ள பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அவசியம் ஏற்பட்டதும் அதற்கென தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தப்பட்டு இருந்ததும் சில மாவட்டங்களுக்கு விரைவில் சென்று சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவாகவும் மேலும் அங்கிருந்து பரப்புரை செய்திட பிரச்சார வாகனமான டெம்போ டிராவலரில் சாலை மார்க்கமாக ஒவ்வொரு ஊராக பயணம் மேற்கொண்டார்.

இவற்றை வைத்து தப்புந்தவறுமாக மைக் கிடைத்ததும் கண்டதை உளறி வருகிறார் பிஜேபி யின் திடீர்த் தலைவர் அண்ணாமலை. நம்மவர் திரையில் மட்டுமே நடிப்புக் கலையை தொடர்பவர் ஆனால் அண்ணாமலை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையாக கண்டபடி நடித்து வருகிறார் என்று பளிச்சென்று தெரிகிறது என்றால் மிகையாகாது.

அண்ணாமலையின் கீழான அரசியல் குறித்து யோசிக்கும் போது தொடர்ந்து பின்வரும் பழமொழி நினைவிற்கு வருகிறது “உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பதே அது.

Kamal Haasan Speech – Paying taxes is more important than donating at temples – video Dailymotion

Kamal Haasan was honoured by the Income Tax department for being “a shining example of good citizenship” by paying his taxes on a regular basis. Here’s an old TV ad he did for IT department. : r/Chennai (reddit.com)