தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023

தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது. தொடர்ந்து மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது எனவும் ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிப்பது சமீபத்தில் வாடிக்கையாகிவிட்டது எனவே ஆளுநர் அவர்கள் தனது மெத்தனப் போக்கை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு அருணாச்சலம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை நிறைவேற்றும் ஒவ்வொரு மசோதாவுக்கும் அதே பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் இயற்றித்தான் ஒப்புதல் பெற வேண்டுமா?. ஆளுநரை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கேள்வி. பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் அறிக்கை.” – மக்கள் நீதி மய்யம்