கோவை : ஜூலை 13, 2௦23

கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில், உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் திரு.R.தங்கவேலு அவர்கள் தலைமை தாங்க, மண்டல செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்களின் முன்னிலையில், மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் திரு.சினேகன் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றுகிறார். விவசாய அணி மாநில செயலாளர் திரு.மயில்சாமி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.மூகாம்பிகா ரத்தினம், பரப்புரை மாநில செயலாளர் திருமதி.அனுஷா ரவி, தொழில் முனைவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஸ்ரீ ராதாஷா தேவியார், மண்டல அமைப்பாளர்கள் திருமதி.அருணா, திருமதி.ரம்யா, திருமதி.மஞ்சுளா, திரு.சித்திக், திரு.ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இக்கண்டன கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் திரு.பிரபு, திரு.சிட்கோ சிவா, திரு.தம்புராஜ், திரு.மனோரம்யன் ஆகியோர் செய்து வருகின்றனர். மய்யத்தினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

2௦21 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை பல சூழ்ச்சிகளின் வாயிலாக தோற்கச் செய்து வெற்றியை விலை கொடுத்துப் பெற்றுக் கொண்ட பாரதிய ஜனதாவின் திருமதி வானதி ஸ்ரீநிவாசன், ஜெயித்த புதிதில் நான் இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என தேர்தல் பரப்புரையில் அள்ளித்தந்த சுமார் 12௦ மேற்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை உருப்படியாக முழுமையாக எதையும் நிறைவேற்றித் தரவில்லை.

ஆனால் அதே சமயம் திரு கமல்ஹாசன் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றை தான் தோல்வியைத் தழுவிய போதும் வாக்குப் பிறழாமல் சொல்லிய வண்ணம் செயல் என்பதாக உடற்பயிற்சிக்கூடம் உபகரணங்கள், பள்ளியில் காற்று மூலமாக குடிநீர் உற்பத்தி செய்துதரும் RO இயந்திரம் என இன்னும் பல திட்டங்களை சொந்த செலவில் செய்து முடித்துள்ளார். அவை மட்டுமல்லாது பல ஆண்டுகளாக கெம்பட்டி காலனி எனும் பகுதியில் போதுமான கழிவறைகள் இல்லை என்பதை அத்தொகுதி கட்சி நிர்வாகிகளின் ஆய்வின் மூலமாக கேட்டுத் தெரிந்து கொண்ட தலைவர் நேரிலும் சென்று அப்பகுதியை சார்ந்த மக்களிடத்தில் உரையாடி நான்கு கழிவறைகள் கட்டித் தர தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கான காலியிடத்தை அரசின் சார்பில் ஒதுக்கித் தந்ததும் கொடுத்த வாக்கினை முடித்துத் தர மக்கள் நீதி மய்யம் என்றும் தயாராக நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற புதிதில் அலுவலகம் ஒன்றைத் திறந்தார் வானதி அவர்கள். அந்த அலுவலகத் திறப்பின் பூஜையின்போது சுவற்றில் தனலாபம் என்றும் எழுதப்பட்டு இருந்ததும் மட்டுமல்லாமல் ரூபாய் தாள் எண்ணும் எலெக்ட்ரானிக் இயந்திரம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது குறித்து எழுந்த பல்வேறு எண்ணங்கள் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கான பணியை தொடர வேண்டியவர் கட்சி ரீதியாக பொறுப்பு வகிப்பதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலும் கட்சி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் பெரும் ஆர்வத்தினை காட்டியதாக தெரிகிறது. இதனிடையில் ஒரு சில செயல்பாடுகளான பள்ளிக்கு டேபிள் சேர் மேஜை போன்ற சொற்ப மதிப்பிலான (சுமார் 11 லட்சங்கள் என குறிப்பிட்டதாக கேள்வி) பொருட்களை MLA நிதியின் மூலமாக தருவித்துத் தந்ததும் அதன்பிறகான அவரது செயல்பாடுகள் குறித்து முறையான தகவல்கள் ஏதும் சரிவர தெரியவில்லை என பரவலாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறித்து அறிந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இது குறித்து கட்சித்தலைமைக்கு தெரியச்செய்தனர். இதன் தீவிரத்தன்மையை அறிந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆலோசனையின் பேரில் கோவை தெற்கு தொகுதியின் செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி ஸ்ரீநிவாசன் அவர்களை கண்டித்து வருகின்ற 16 ஆம் தேதியன்று உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பெரும்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான அடிப்படை தேவைகளை அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரும் உயரிய நோக்கில் இத்தகைய ஆர்ப்பாட்டத்தினை நடத்திட முனைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மய்யத்தமிழர்கள் தமது வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

#KamalHaasan #மய்யஆர்ப்பாட்டம்