சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த குக்கி இன பெண்கள் இருவர் மெய்தி இன மக்கள் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி முழு நிர்வாணமாக கங்போக்பி எனும் மாவட்டத்தில் உள்ள B பஹைனோம் எனும் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட காணொளி ஜூலை மாதத்தில் சமூக ஊடகங்களின் வழியாக வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அழுத்தம் தந்தது. அதன்பிறகே மாநில அரசின் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறை இது குறித்த புகார் கடந்த மே மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீவிர வேட்டைக்கு பின் பலரையும் கைது செய்து குறிப்பாக இதில் ஈடுபட்ட மூன்று நபர்களை முதன்மை குற்றவாளிகள் என முதற்கட்ட தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தது. எனினும் மாநில அரசின் முதல்வர் எந்த விதமான பொறுப்பான பதிலையும் இதுவரை தரவில்லை. அதே போன்று இந்தியாவின் தலைமகன் எனும் பொறுப்பில் இருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் தொடர்ந்து நடந்துவரும் கலவரங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில்களை தராமல் அமைதியாக கடந்து செல்கிறார்.

இது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகள் எழுப்பியுள்ளது, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக அணியின் மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அவர்கள் IBC தம்,தமிழ் எனும் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பல தகவல்களை கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் என்பவர் நாட்டின் தலைமகன் அல்லவா? அவர் மணிப்பூருக்கு செல்ல ஏன் தயங்குகிறார்? பாராளுமன்றத்தில் விவாதிக்கவும் ஏன் தயங்குகிறார்? – மய்ய ஊடக மாநில செயலாளர் திரு.முரளி அப்பாஸ் – மக்கள் நீதி மய்யம்


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #SaveManipur #ManipurViolence #MaiamforManipur