பிப்ரவரி 15, 2024

தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி பெறப்படும் நன்கொடைகளை கட்சியின் வளர்ச்சிக்கும் தேர்தல்களில் செலவுகள் மேற்கொள்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்வார்கள். இதனை தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததும் வரவு செலவு கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இவை மட்டுமல்லாது ஒவ்வொரு நிதியாண்டுக்கான வரவு செலவுகளை அங்கீகரிக்கப்பட்ட பட்டய கணக்கர்கள் மூலமாக ஆய்வுகள் மற்றும் தணிக்கை செய்யப்பட்டு வருமானவரி துறையிடம் சமர்பிக்க வேண்டும் என்பதும் சட்ட ரீதியான செயல்பாடுகள்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 2017 இல் தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதா இயற்றப்பட்டு 2018 இல் சனவரி 2 அன்று அமல்படுத்தியது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள 29 கிளைகளிலும் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000, ரூ.10000, ரூ.100,000 மற்றும் ரூ.1 கோடி வரை தனிநபர் அல்லது இந்திய நிறுவனம் ஆகியோர் இந்தப் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் அல்லது காசோலை போன்ற அச்சிட்ட உறுதிமொழி பாத்திரங்களாக வாங்கிக் கொள்ளலாம். பத்திரம் வாங்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் வரையே செல்லுபடியாகும் மேலும் இந்த கால அவகாசத்திற்கு எந்த வித வட்டியும் வங்கி சார்பில் வரவு வைக்கப்படாது. மேலும் இவ்வகையான பத்திரங்கள் வருடத்தின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்தில் முதல் ௧ நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டது எனில் அப்போது மட்டும் 30 நாட்கள் வரை தேர்தல் பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தல் பத்திரங்கள் பெற குறிப்பிட்ட சில வரம்புகளை நிர்ணயித்து மக்கள் பிரதிநித்துவம் சட்டத்தை அடிப்படையாக கொண்டு சட்டமன்றம் அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீககரிக்கப்பட்ட கட்சிகள் வங்கிக் கணக்கில் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் நன்கொடை அளிப்பவர்கள் விபரங்கள் எதுவும் பத்திரங்களில் குறிப்பிட்டு இருக்காது என்பதால் அளித்தவர் யார் எவர் என்ற தரவுகளை கட்சிகள் அறிந்து கொள்ளமுடியாது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் வழங்குபவர் மற்றும் பெற்றுக் கொள்ளும் கட்சிகள் நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கும் பெற்றுக் கொள்ளலாம்.

சரி இவற்றினால் என்ன தவறு வெளிப்படைத்தன்மை உள்ளதே இதனால் ரொக்கமாக பணப்பரிமாற்றம் நடைபெற வாய்ப்பில்லையே இதனால் முறைகேடான நிதிகள், அதாவது கறுப்புப்பணம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படாமல் கட்டுப்படுத்தப்படும் என்பதாக அரசு கருதியது.

ஒரு அரசியல்கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதி வழங்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் யார் என பரஸ்பரம் கட்சிக்கும் வழங்குபவர்களுக்கும் தெரியாது என்பதால் எந்த அனுகூலமும் கிடைக்க பெறாது என்பது வாதமாக வைக்கப்பட்டாலும் தேர்தல் பத்திரங்களை எதிர்ப்பவர்கள் நன்கொடையாளர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருப்பதால் அளிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் தொகையும் கூடிக்கொண்டே போக வாய்ப்புள்ளதால் கறுப்புப் பணம் புழங்குவதை இதை வைத்துக் கட்டுபடுத்தி விட முடியாது என்பதும் அவர்களின் வாதமே.

எது எப்படியாக இருந்தாலும் இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அரசியல் வல்லுனர்களின் கருத்து. இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து வந்த உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அமர்வு பல கட்டங்களுக்கு ஆராய்ந்த பின்னர் இத்தகைய தேர்தல் பத்திரங்களை இனியும் விநியோகிக்க முடியாது என்றும் அவற்றை உடனடியாக ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளனர். இத்தகைய தேர்தல் பத்திரங்களில் உண்மைத்தன்மை இல்லை இதனால் இவற்றை அளித்த நிறுவனங்கள் தங்களின் ஷரத்துகளை திருத்தியது அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் சட்டவிரோதமானதும் ஆகும் இவை சராசரி பொதுமக்களின் சராசரி அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், மேலும் இதுவரை நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட நிதிகளின் விபரம் மற்றும் பத்திரங்களை வாங்கிக் கொள்ள நன்கொடை செலுத்தியவர்களின் முழு விபரமும் சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு குறித்தும், தனது எதிர்ப்பை தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தற்போது உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஒளிவுமறைவு உள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த தங்களின் அச்சத்தினை தெரிவித்து அவற்றை உடனடியாக ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது இதுவரை குழிதோண்டி புதைக்கப்பட்ட நீதியை வெளிக்கொணர்ந்து விட்டதற்கு ஈடாகும். இத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“The Hon’ble Supreme Court has made a historic decision which corrects a grave error in our election finance laws. By striking down electoral bonds as unconstitutional, the SC has shed light on the dark halls of backroom politics and finance. This judgment prevents the concentration of power in the hands of a privileged few. Transparency is the bedrock on which democracy thrives. People have a right to know how the political leaders and parties they support are financed”.Kamal Haasan, President – Makkal Needhi Maiam

தமிழாக்கம்

“மாண்புமிகு உச்சநீதிமன்றம், நமது தேர்தல் நிதிச் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய தவறை சரிசெய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்களை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கியதன் மூலம், முறையற்ற அரசியல் மற்றும் அது சார்ந்த முறையற்ற நிதி ஆகியவற்றை SC வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது.

இந்த தீர்ப்பு சலுகை பெற்ற சிலரின் கைகளில் அதிகாரம் குவிவதை தடுக்கிறது. வெளிப்படைத்தன்மை என்பது முறையான ஜனநாயகத்தின் அடித்தளம். தாங்கள் ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு எப்படி நிதி வழங்கப்படுகிறது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

#ElectoralBonds #Elections2024 #Judgement #SupremeCourt #SCHonorableJudges