மே 27, 2௦23

உலக திரையுலக வரலாற்றில் இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான பங்களிப்பை தந்து பெரும் பங்காற்றி வருவது தமிழ்த் திரையுலகம் என அனைவரும் அறிந்ததே.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்த் திரையுலகில் சுமார் 6 வயது முதலே இதுவரை தனக்கான முத்திரையை நடிப்பில் மட்டுமல்லாது திரைக்குப்பின்னால் உள்ள தொழில்நுட்பப் பணிகள் வரை வெகு சிரத்தையாக செய்துவருவதில் மிகப் பெரிய அளவில் பங்காற்றி வருகிறார் நம்மவர் என்றும் ஆண்டவர் என்றும் அன்புடன் அடைமொழிகளுடன் அழைக்கப்படும் திரு கமல்ஹாசன் அவர்கள்.

நடிப்பு, கதையாக்கம், திரைக்கதை, வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஒப்பனை எனும் பட்டியலில் புதிய தொழில்நுட்பங்களான கேமரா, ஒலியமைப்பு எனும் டிஜிட்டல் முறையில் ஒலிகளை இணைத்தல் என பல வகைகளில் தன்னை சினிமா எனும் பிரம்மாண்ட கலையில் முழு ஈடுபாட்டுடன் அர்பணித்துக் கொண்டுள்ள திரு கமல்ஹாசன் அவர்களுக்கு தேசிய விருதுகள், தமிழக அரசின் விருதுகள், அண்டை மாநில அரசுகளின் விருதுகள், பல தனியார் அமைப்புகள் மற்றும் திரை சார்ந்த அமைப்புகள், அயல்நாடுகளில் உள்ள அமைப்புகள் அளிக்கும் விருதுகள் இன்னும் சொல்வதென்றால் பிரான்ஸ் நாட்டில் திரைத்துறைக்கு வழங்கப்படும் செவாலியே எனும் உயரிய விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது உலக அளவில் International Indian Film Academy Awards (IIFA) மூலமாக திரு கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை இன்று அபுதாபியில் வழங்கப்படவுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்தனர் IIFA அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் திரு கமல்ஹாசன் அப்போது ஓர் பத்திரிக்கையாளர் கேரளா ஸ்டோரி எனும் படத்தினை பற்றி கேட்ட கேள்விக்கு “நான் பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன், உண்மைக் கதை என்று மட்டும் கூறினால் மட்டும் போதாது ; அது உண்மையாக இருக்க வேண்டும் இப்படத்தில் உண்மை இல்லை என்று தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

“பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான்” – ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கமல் | IIFA award I told you, its propagandist films that I am against says kamal – hindutamil.in

Kamal Haasan on The Kerala Story: ‘I am against propagandist films, not enough to write true story at bottom..’ | Entertainment News,The Indian Express

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கமல் ஹாசன் கருத்து விவரம் உள்ளே – Kamal haasan about the kerala story movie | Galatta

#TheKeralaStory #KamalHaasan #IIFA2023