ஜனவரி 23, 2024
இந்திய தேசிய ராணுவம் எனும் பெரும் அமைப்பை நிறுவிய பெருமை நேதாஜி என அன்புடன் அழைக்கப்படும் திரு.சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி அவர்களின் வாழ்வும் வரலாறும் என்றும் அவர் புகழை ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். அத்தகைய வீரம் செறிந்த நேதாஜி அவர்களின் 127 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் மீது பெரும் பற்று கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிமிகு வாழ்த்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனித்துத் துலங்கிய தீரமிகு போராட்டத் தளகர்த்தரும், பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் சொற்களுக்கு வடிவமாக வாழ்ந்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றி மகிழ்கிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்


#Nethaji #SubashChandraBose #KamalHaasan