மே 13, 2௦23
கிட்டத்தட்ட 40% விழுக்காடு வரை கமிஷன் பெறப்பட்டு விதிமுறைகள் மீறியும் தரமற்ற ஆட்சியில் தள்ளாடிக் கொண்டிருந்த கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் நடந்து முடிந்தது. தேர்தல் பரப்புரைகள், அனல் பறந்த பிரச்சாரங்கள், இரண்டு பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய இருவருக்கிடையில் வாழ்வா சாவா என்பதாக பெரும் போராட்டம்.
கடந்த ஆண்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு ராகுல்காந்தி அவர்கள் இந்தியா முழுதும் பாரத் ஜோடோ யாத்ரா எனும் நடைபயணம் மிகுந்த பலனை அளித்துள்ளது என்றும் அறியலாம். கடுமையான மதவாதம், ஒடுக்குதல், வேலைவாய்ப்பின்மை, கடுமையாக உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம். அரசின் மிக முக்கிய அலுவலகங்களில் அப்பட்டமாக லஞ்சமும் கமிஷனும் சர்வசாதாரணமாக புழக்கமும் இப்படி ஒவ்வாத ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக பொதுமக்களே சலிப்படைய நேரிட்டது அதன் விளைவே இந்த பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக அமைந்தது என சொல்லலாம்.
ஆயிரம் சாதி பாகுபாடு & பன்மடங்கு வேற்றுமை காண்பது பிரித்தாளும் சூழ்ச்சியும் மத துவேஷங்களும் மட்டுமே தலையாய பணியாய் செய்துவரும் ஓர் கட்சியாக உள்ள காவி கட்சியின் போலி முகம் கர்நாடக மக்களால் தெரிய வந்துள்ளது. என்றைக்கும் பிரிவினையும், பொய்களும், புரட்டுகளும், மதவாதமும் சில நேரங்களில் ஜெயித்து நின்றாலும் அதற்கு ஆயுள் காலம் குறைவு என்பதும் அஹிம்சையும் அறமும் தேசியவாதமும் ஒற்றுமையும் அன்பும் அறனும் மட்டுமே நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் என்றும் நமக்கு கண்கூடாக காட்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி துடைத்தெறியப் பட்டுள்ளது.
பொய், புரட்டுகள், மதவாதம் தோற்றது : அஹிம்சையும் அறமும் ஜெயித்தது : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து
Shri Rahul Gandhi Ji, Heartiest Congratulations for this significant victory! Just as Gandhiji, you walked your way into peoples hearts and as he did you demonstrated that in your gentle way you can shake the powers of the world -with love and humility. Your credible and creditable approach, without bravado or chest thumping has ushered a breath of fresh air for the people. You trusted the people of Karnataka to reject divisiveness, who in turn have unitedly reciprocated by placing their faith in you. Kudos for not just the victory but also for the manner of victory ! – Kamal Haasan, President, Makkal Neethi Maim