சென்னை : டிசம்பர் 30, 2024
மக்கள் நீதி மய்யம் அரசியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்சியாக உருவெடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் 2018 இல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2019 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு மக்களின் மனதில் ஏகோபித்த நேர்மை மிகுந்த அரசியல் இயக்கமாக பதிவானது. தொடர்ச்சியாக 2021 இல் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தது, அதற்கடுத்து நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் என இதுவரை களம் கண்ட தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் தனது வேட்பாளர்களை போட்டியிட வைத்த மக்கள் நீதி மய்யம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் களம் காண தயாராகி வருகிறது.
மய்யம் என்றாலே அதன் தலைவரான நேர்மையாளர் திரு. கமல்ஹாசன் என்பதும் கட்சியின் சின்னமான டார்ச் லைட் என்பதும் மக்களின் எண்ணத்தில் பதிவாகி உள்ளபடியால் நடைபெறவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு டார்ச்லைட் சின்னத்தினை ஒதுக்கித் தரும்படி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது, மேலும் இந்திய தேர்தல் ஆணையம் கட்சிகள் தங்களுக்கு தேவையான சின்னத்தை கேட்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது, அதன்படியே அதே தேதியில் டார்ச் லைட் சின்னம் கேட்டு விண்ணப்பம் அளித்தது குறிப்பிடத்தக்கது.