வருகின்ற நகராட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வார்டு வரையறை மூலம் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இப்போழுது உங்களின் வார்டு ஒருவேளை மாறியிருக்கலாம். அவ்வாறு மாறியிருந்தால் உங்களால் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அதே இடத்திற்கு சென்று வாக்களிக்க முடியாது.
அங்கு உங்கள் தெருவின் பெயரே கூட இல்லாமல் போகலாம். எனவே, முதலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அது தெரிந்தால் தான் உங்களால் வாக்களிக்க முடியும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Find your polling station
https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ததும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை டைப் செய்யவும்.
பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்சா Captcha வை டைப் செய்யவும். பின், ஷோ ரிசல்ட் ஐ கிளிக் செய்யவும். Show Result கிளிக் செய்ததும் மொத்த விவரமும் வந்துவிடும். பெயர், தந்தை பெயர், 3/4
வாக்காளர் அடையாள அட்டை எண், மாவட்டம், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச் சாவடி எண், வாக்குச் சாவடி பெயர், வாக்காளர் பட்டியலின் பாகம், வாக்காளர் பட்டியலின் வரிசை எண் ஆகிய விவரங்கள் வந்துவிடும். எனவே, இதை சரிபாராமல் பழைய வாக்குச் சாவடிக்குச் சென்றால் உங்கள் தெரு பெயரே இருக்காது.
வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இப்போதே மேலே கொடுத்துள்ள லிங்கில் உங்களின் சரியான வார்டு & வாக்குச் சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.