சென்னை : ஏப்ரல் 10, 2024
மதுரை என்றாலே பல சிறப்புகள் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை எனும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. ஆயிரங்கால் மண்டபம், திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை குண்டுமல்லி, கீழடி தொல்பொருள் ஆய்வு மண்டபம் என பல சிறப்புகள் உண்டு. இன்னும் குறிப்பாக சொல்லபோனால் புதிய வரலாறாக ஒன்றிய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானமும் அடங்கும். 2019 இல் ஆளும் பாஜக அரசின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மதுரைக்கு வந்திருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் துவங்கி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என கொடுத்த வாக்குறுதி தந்துவிட்டு அதற்காக செங்கற்களை நாட்டி பூமிபூஜையும் செய்து விட்டு சென்றார். ஆயிற்று முழுதாக நான்கு வருடங்கள் கடத்து பாஜகவின் ஆட்சிக்காலமான இறுதியாண்டு 2024 ஆம் ஆண்டும் வந்து விட்டது. இம்மாதம் 19 ஆம் தேதியன்று பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவே இல்லை. மாறாக மருத்துவமனை கட்டுமானத்திற்கென சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல் ஒன்றினை எடுத்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடையே அதைக் காண்பித்து ஒன்றிய அரசின் எய்ம்ஸ் குறித்தான பொய் வெட்டவெளிச்சமாக்கி காண்பித்தார் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த மதுரைக்கு நாளை (11.04.2024) விரைகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள். மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.சு. வெங்கடேசன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்யவிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ம.நீ.ம
நன்றி : மய்யம்