சென்னை டிசம்பர் 18, 2021
விடியல் தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் மக்களின் வாழ்வை இருளாக்கிய வீடுகள் இடிப்பு, சென்னை கொளத்தூர் அவ்வை நகரில் திடீரென குறிப்பிட்ட பகுதியில் சுமார் வருடங்களாக குடி இருந்து வந்த வீடுகளை இடித்துத் தள்ளிய அரசு நிர்வாகம். அந்த இடம் நீர்நிலைப் பகுதி எனவும் அங்கே மேம்பாலம் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றையும் நிர்மானிக்கப் படவிருப்பதாக அறிவித்துவிட்டு இச்செயலை செய்து மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது அதுவும் இந்தப் பகுதி மாண்புமிகு தமிழக முதல்வர் மூன்றாவது முறையாக தேர்தலில் ஜெயித்த கொளத்தூர் தொகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடுகள் இடிப்பால் சுமார் 50 குடும்பங்கள் செய்வது அறியாமல் தவித்துக் கொண்டிருப்பது வேதனையை தருகிறது, அதில் வசித்து வந்த மக்களின் வெறுப்பை அறுவடை செய்துள்ளது அரசு நிர்வாகம். “எங்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி கட்டப்படும் பூங்காவினால் என்ன பயன் ?” என்று கேட்கின்றனர் அப்பகுதியை சார்ந்த மக்கள். மேலும் இதுநாள்வரை எங்களுக்கு தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைரேஷன்கார்டு முதலானவையும் தந்தது ஏன் எனவும் கேட்கும் இவர்களுக்கு என்ன பதில் தரப்போகிறது மாவட்ட நிர்வாகம் ?
இந்த குடியிருப்புகள் இடிப்பதை எதிர்த்து போராட்டம் செய்த மக்களை கைது செய்தது இன்னும் அவலம்.