அக்டோபர் : 02, 2024

ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து அதில் சொல்லொனாத் துயரங்களை தாங்கி இறுதியாக பெற்ற சுதந்திரத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு மறைந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்திஜி அவர்கள். தேசப்பிதா என்றும் நமது மக்கள் அனைவராலும் அழைக்கப்படுபவர். இன்று 155 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுதும் மட்டுமல்ல காந்திஜியை அறிந்த உலகமக்கள் பலராலும் பல நாடுகளில் அவரது பொன்மொழிகளை அவரது அமைதி அன்பு அறிவு அஹிம்சை என அனைத்து குணங்களையும் நினைவுகூர்ந்து அவர் வழி நடக்க வேண்டும் என்கிற உத்வேகத்தோடு உறுதிமொழியுடனும் கொண்டாடப்படுகிறது. காந்தியடிகளின் பிறந்த நாளிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

“Gandhiji’s life lived in the service of his fellow man, shall withstand the test of time, as the seminal moment in human history, when one simple man altered the course of ideological evolution of human civilisation.

As for me, I have taken my own journey both with the man and the idea. He shall always remain my conscience, my Bapu who like my father, taught me that honesty and love for all shall conquer all.”Kamal Haasan, President – Makkal Needhi Maiam

தலைவர் அவர்களின் வாழ்த்து (தமிழாக்கம்)

சக மனிதனின் சேவையில் வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை, மனித நாகரிகத்தின் கருத்தியல் பரிணாம வளர்ச்சியின் போக்கை ஒரு எளிய மனிதர் மாற்றிய மனித வரலாற்றின் முக்கிய தருணமாக, காலத்தின் சோதனையைத் தாங்கும்.

என்னைப் பொறுத்தவரை, நான் எனது சொந்த பயணத்தை மனிதன் மற்றும் யோசனையுடன் எடுத்துள்ளேன். அவர் எப்போதும் என் மனசாட்சியாக இருப்பார், என் தந்தையைப் போலவே, நேர்மையும் அன்பும் அனைவரையும் வெல்லும் என்று எனக்குக் கற்பித்த எனது பாபு.

#GandhiJayanti

நன்றி : மக்கள் நீதி மய்யம் & சமூக ஊடகம்