டிசம்பர் 02, 2024

பென்ஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் வெள்ளமும் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வாறு பெய்த கனமழையால் அண்ணாமலையார் மழையின் கிழக்குப் பக்கத்தில் வ.ஊ.சி நகர் பகுதியில் யாரும் எதிர்பாராவண்ணம் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மண் சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரும் உயிர்சேதமும் உடமைகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டது. இது பேரிடராக அறிவிக்கப்பட்டது.

பொதுவாக அடைமழை காலங்களில் சிறிது சிறிதான மண் சரிவுகள் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் முன்பெல்லாம் ஏற்பட்டதுண்டு. ஆயினும் இப்போது ஏற்பட்ட திருவண்ணாமலை நிலச்சரிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரணங்களை உரிய நேரத்தில் கிடைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://www.maiam.com/blog/president-s-corner-11/thiruvannamalai-landslide-tragedy-kamal-haasan-expresses-condolences-urges-swift-relief-measures-922

https://www.maalaimalar.com/news/tamilnadu/7-killed-in-tiruvannamalai-landslide-heart-wrenching-kamal-749587

நன்றி : மக்கள் நீதி மய்யம் மற்றும் இணையதள செய்தித்தாள் சமூக ஊடகங்கள்