திண்டுக்கல் : டிசம்பர் 13, 2024
திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 6 வயதே ஆன குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இது மக்களிடையே பெரும் கவலையும் வேதனையும் அளிக்கிறது. இந்த துயரச்சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது வருத்தம் தோய்ந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
(இணையதளத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படம்)
இந்த தீ விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் உறவினரின் மரணம் சொல்லொனாத் துயரம் தரும். மன வலிமை கிடைத்திட வேண்டும். மேலும் தீ விபத்தின் காரணமாக காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையும் தொடர்ந்து கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். இது போல் மீண்டும் நிகழா வண்ணம் தகுந்த பாதுகாப்பு முறைமைகள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
“திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 6 வயதுக் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். மருத்துவமனைகளில் இனியும் இதுபோன்ற விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் அவசியம்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம் & இணையதள செய்தி ஊடகம்