ஜனவரி 06, 2025
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைவராக திரு.பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதனை வரவேற்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்து. அரசியல் பணிகளுக்காகப் பாராட்டுகளும், சமூகப் பணிகளுக்காக விருதுகளும் பெற்றிருக்கும் தோழரைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் என் வாழ்த்துகள்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்